Tuesday, November 11, 2025

பணம் தேடி ஓடுகின்ற மனிதர்களே!

பணம் தேடி ஓடுகின்ற மனிதர்களே!
குணம் இல்லா பணத்தாலே என்னபயன்?
சொத்துசுகம் தேடி வைத்த பின்னாளில்
நிம்மதியை தேடி ஏன்? அலைகின்றீர்
பணம் தேடி உறவுகளை மறந்து விட்டோம்
உறவு விட்டு வெகு தூரம் பறந்து விட்டோம்
மகிழ்ச்சியான வாழ்க்கையினை வாழ வேண்டும்
உளந்தொட்டு மனம் நிறைய பேச வேண்டும்.

பணம் தேடி ஓடுகின்ற மனிதர்களே!
குணம் இல்லா பணத்தாலே என்னபயன்?
சொத்துசுகம் தேடி வைத்த பின்னாளில்
நிம்மதியை தேடி ஏன்? அலைகின்றீர்

அன்பு இருக்கும் இடத்தினிலே
உள்ளம் கொண்டு சேர்க்கின்றோம்
அன்பாய் நாமும் இருந்திடவே
யாரும் எண்ணம் கொண்டதில்லை
அன்பு ஒன்றே நோய்தீர்க்கும்
அன்பு ஒன்றே உயிர்வளர்க்கும்
அன்பு ஒன்றே பலம்சேர்க்கும்
அன்பாய் இருக்கப் பழகிடுவோம்

பணம் தேடி ஓடுகின்ற மனிதர்களே!
குணம் இல்லா பணத்தாலே என்னபயன்?
சொத்துசுகம் தேடி வைத்த பின்னாளில்
நிம்மதியை தேடி ஏன்? அலைகின்றீர்  

அன்பில் லாத குடும்பத்தில்
அமைதி என்றும் இருப்பதில்லை
அன்பைத் தேடி குழந்தைகளும்
ஆற்று நீராய் ஓடிடுமே
அன்பு ஒன்றே உறவுகளை
அணைத்து கட்டி ஒன்றிணைக்கும்
அன்பாய் நாளும் பழகிடுவோம்
அருமை உணர்ந்து செயல்படுவோம்

பணம் தேடி ஓடுகின்ற மனிதர்களே!
குணம் இல்லா பணத்தாலே என்னபயன்?
சொத்துசுகம் தேடி வைத்த பின்னாளில்
நிம்மதியை தேடி ஏன்? அலைகின்றீர்