என்னை ஆளும் தேவியே!
மாலை கையில் ஏந்தி நிற்கும் பாஞ்சாலியே!
குளம்காக்கும் தெய்வமாய்
அருள் வழங்கும் தேவியே!
வெற்றி மாலை சூடிக்கொண்ட யாகசேனியே!
அருள் வழங்கும் தேவியே!
வெற்றி மாலை சூடிக்கொண்ட யாகசேனியே!
என்னை ஆளும் தேவியே!
மாலை கையில் ஏந்தி நிற்கும் பாஞ்சாலியே!
அக்கினியில் பிறந்தவளே!
அன்புபாசம் கொண்டவளே!
அனந்தனின் சோதரியே!
ஐவர்களின் பத்தினியே!
முன்னைவரம் வேண்டி வந்த தாயே!
முழுநிலவாய் மண்ணில் வந்தாய் நீயே!
மஞ்ச சேலைக் காரியே!
என்னை ஆளும் தேவியே!
மாலை கையில் ஏந்தி நிற்கும் பாஞ்சாலியே!
பாஞ்சாலன் பொன்மகளே!
குந்தி பாண்டு மருமகளே!
அர்ஜுனனை கவர்ந்தவளே!
மாலை சூடி வந்தவளே!
ரெட்டணையில் கோவில் கொண்ட தாயே!
எங்கள் குலம் காத்திடுவாய் நீயே!
மஞ்ச சேலைக் காரியே!
என்னை ஆளும் தேவியே!
மாலை கையில் ஏந்தி நிற்கும் பாஞ்சாலியே!