Tuesday, December 2, 2025

துள்ளி துள்ளி வந்திடும்

துள்ளி துள்ளி வந்திடும்
தென்றல் நீயடி
பிள்ளை அள்ளிக் கொஞ்சிடும்
கன்னித் தாயடி
ஊஞ்ச லாட்டும் அன்பிலே
சொக்கிப் போகிறேன்
உந்தன் பேச்சில் மகிழ்ந்திடும்.
பிள்ளை யாகிறேன்.

துள்ளி துள்ளி வந்திடும்
தென்றல் நீயடி
பிள்ளை அள்ளிக் கொஞ்சிடும்
கன்னித் தாயடி

கன்னக் குழியின் சிரிப்பிலே 
தொலைந்து போகிறேன். 
தொட்டு தூக்கி கொஞ்சிட
மகிழ்ந்து வாழ்கிறேன்.
பாதம் நெஞ்சில் வைத்துநான்
உன்னைச் சுமக்கிறேன். 
தேனும் பாலும் செவிதொட
சுவைத்து மகிழ்கிறேன்.

துள்ளி துள்ளி வந்திடும்
தென்றல் நீயடி
பிள்ளை அள்ளிக் கொஞ்சிடும்
கன்னித் தாயடி

சோறு ஊட்டி மகிழ்ந்திடும் 
சின்னத் தாயடி 
பரிவு காட்டி இருந்திடும்
தோழி நீயடி 
அறிவு சொல்லி தந்திடும் 
உனது பேச்சடி
ஆணையிட்டு கொஞ்சிடும்
அரசி தானடி

துள்ளி துள்ளி வந்திடும்
தென்றல் நீயடி
பிள்ளை அள்ளிக் கொஞ்சிடும்
கன்னித் தாயடி

 [Verse - male Voice]
[Verse - female Voice]