மூணாவது வெள்ளியில
தேரோட்டம் காணுகிற
ரெட்டணையின் வெண்ணியம்மா
வைகாசி மாசத்துல
மூணாவது வெள்ளியில
தேரோட்டம் காணுகிற
ரெட்டணையின் வெண்ணியம்மா
வேல்குத்தி தேரிழுத்து
நேர்த்திக் கடன் செய்கின்றோம்
குற்றம் குறையிருந்தால்
பொறுத்திட வேண்டுமம்மா
வைகாசி மாசத்துல
மூணாவது வெள்ளியில
தேரோட்டம் காணுகிற
ரெட்டணையின் வெண்ணியம்மா
தேரோடும் வீதியிலே
ஆடிவரும் வெண்ணியம்மா
மக்கள் குறை தீர்த்து வைத்து
ஆட்சி செய்யும் அன்னையம்மா
தேரோடும் வீதியிலே
ஆடிவரும் வெண்ணியம்மா
மக்கள் குறை தீர்த்து வைத்து
ஆட்சி செய்யும் அன்னையம்மா
நாட்டிலுள்ள மக்கள் எல்லாம்
உன்பெருமை சொல்லுதம்மா
நாடுதாண்டி நாடுதாண்டி
உன்புகழும் செல்லுதம்மா
வைகாசி மாசத்துல
மூணாவது வெள்ளியில
தேரோட்டம் காணுகிற
ரெட்டணையின் வெண்ணியம்மா
சின்ன சின்ன சொல்லெடுத்து
உன்பெருமை நான்தொடுத்து
பாட்டாலே சொல்லி வைத்தேன்
பாடும் புகழ் உள்ளே வைத்தேன்
சின்ன சின்ன சொல்லெடுத்து
உன்பெருமை நான்தொடுத்து
பாட்டாலே சொல்லி வைத்தேன்
பாடும் புகழ் உள்ளே வைத்தேன்
வெற்றிலையும் பாக்கும் வைத்து
தேங்காய் பழம் பூவும் வைத்து
பக்தியுடன் வேண்டி வந்தேன்
உன்னழகைக் காணவந்தேன்
வைகாசி மாசத்துல
மூணாவது வெள்ளியில
தேரோட்டம் காணுகிற
ரெட்டணையின் வெண்ணியம்மா
வேல்குத்தி தேரிழுத்து
நேர்த்திக் கடன் செய்கின்றோம்
குற்றம் குறையிருந்தால்
பொறுத்திட வேண்டுமம்மா
வைகாசி மாசத்துல
மூணாவது வெள்ளியில
தேரோட்டம் காணுகிற
ரெட்டணையின் வெண்ணியம்மா
எங்கள் ஊரில் எல்லாம் உண்டு
வெண்ணியம்மா காவல் செய்ய
வீதி எங்கும் வெற்றி உண்டு
வண்ணப் பூக்கள் அலங்காரம்
வாசல் வந்து குடியேறும்
வண்ண வண்ண விளக்குகள்
கோவில் எங்கும் ஒளிவீசும்
எங்கள் அம்மன் ஆசியாலே மக்கள் பணி செய்வதற்கு நெஞ்சை உண்டு புஞ்சை உண்டு எங்கள் ஊரில் இருந்தார்கள்
வண்ண வண்ண பூவெடுத்து
வகை வகையாய் அலங்கரித்து
ஊஞ்சலிலே ஆடி ஆடி
ஆசிதந்து நிற்பவனே
தேரோடும் வீதியிலே
தென்றல் போல ஆடி வந்தாள்
வேண்டி நின்ற பக்தருக்கு
கேட்டவரம் தந்து வந்தாள்
நீரோடும் ஆற்றங்கரை மேட்டினிலே கோவில் கொண்டாள்