காக்கும் கடவுளின் அம்சம் நீயே
வைஷ்ணவியே வைஷ்ணவியே!
வையம் காத்திடும் வைஷ்ணவியே!
ஏழுக் கன்னியின் ஒருத்தி நீயே!
தாமரைப் பூவில் அமர்ந்திருப் பாயே!
நீல வண்ணம் கொண்டவள் நீயே!
நீரும் நிலமும் ஆனவள் நீயே!
வைஷ்ணவி தாயே! வைஷ்ணவி தாயே!
வையம் காத்திடும் வைஷ்ணவி தாயே!
மூன்று சக்திகள் ஒன்று சேர்ந்திட
ஒர் உருவமாய் ஆனவள்மூன்று லோகமும் காக்க வேண்டியே
கன்னி வடிவமாய் வந்தவள்
சங்கு சக்கரம் கையில் ஏந்தியே
காக்கும் தொழிலினைக் கொண்டவள்
காவல் தெய்வமாய் எங்கள் ஊரினை
காத்து சிறப்புடன் ஆள்பவள்
வைஷ்ணவி தாயே! வைஷ்ணவி தாயே!
வையம் காத்திடும் வைஷ்ணவி தாயே!
கன்னி தெய்வமாய் வந்த காரியம்
முடித்து வெற்றியைக் கண்டவள்
தொண்டி நதிக்கரை ஊரின் ஓரமாய்
கோவில் கொண்டதில் இருந்தவள்
எல்லை தெய்வமாய் காக்கும் வீரனாய்
இருந்து மக்களைக் காப்பவள்
நம்பி வந்தவர் உள்ளம் நிறைந்திட
அள்ளி அள்ளியே தந்தவள்
வைஷ்ணவி தாயே! வைஷ்ணவி தாயே!
வையம் காத்திடும் வைஷ்ணவி தாயே!
வைஷ்ணவியே வைஷ்ணவியே!
வையம் காக்கும் வைஷ்ணவியே!
ஏழுக் கன்னியின் ஒருத்தி நீயே!
தாமரைப் பூவில் அமர்ந்திருப் பாயே!
நீல வண்ணம் கொண்டவள் நீயே!
நீரும் நிலமும் ஆனவள் நீயே!
வைஷ்ணவி தாயே! வைஷ்ணவி தாயே!
வையம் காத்திடும் வைஷ்ணவி தாயே!
மூன்று சக்திகள் ஒன்று சேர்ந்திட
ஒர் உருவமாய் ஆனவள்மூன்று லோகமும் காக்க வேண்டியே
கன்னி வடிவமாய் வந்தவள்
சங்கு சக்கரம் கையில் ஏந்தியே
காக்கும் தொழிலினைக் கொண்டவள்
காவல் தெய்வமாய் எங்கள் ஊரினை
காத்து சிறப்புடன் ஆள்பவள்
வைஷ்ணவி தாயே! வைஷ்ணவி தாயே!
வையம் காத்திடும் வைஷ்ணவி தாயே!
கன்னி தெய்வமாய் வந்த காரியம்
முடித்து வெற்றியைக் கண்டவள்
தொண்டி நதிக்கரை ஊரின் ஓரமாய்
கோவில் கொண்டதில் இருந்தவள்
எல்லை தெய்வமாய் காக்கும் வீரனாய்
இருந்து மக்களைக் காப்பவள்
நம்பி வந்தவர் உள்ளம் நிறைந்திட
அள்ளி அள்ளியே தந்தவள்
வைஷ்ணவி தாயே! வைஷ்ணவி தாயே!
வையம் காத்திடும் வைஷ்ணவி தாயே!