Wednesday, December 24, 2025

பச்சை வண்ண சேலையை

பச்சை வண்ண சேலையைக் 
கட்டிக் கொண்ட மண்மகள் 
தென்றல் மேனி தீண்டிட 
சிலிர்த்து நிற்கும் பூமகள்
பூக்கள் சூடிய செடிகளும் 
அசைந்து நடனம் செய்யுதே 
கொடியில் வீணை மீட்டியே 
காற்றும் நுழைந்து செல்லுதே



அழகு தேவதை அசைந்து வருகிறாள் 
பருவ நிலவு போல் கவர்ந்து வருகிறாள் 
மல்லன் சிலை ஒன்று நடந்து வருகிறாள் 
கலையில் குறையாமல் கடந்து வருகிறாள் 
காளையார் நெஞ்சம் கவர்ந்து வருகிறாள் 
நளினம் கொண்டவள் நகர்ந்து வருகிறாள்