Tuesday, December 23, 2025

மூன்று சக்தி ஒன்று சேர்ந்த வடிவமே

மூன்று சக்தியின் வடிவம் நீயே 
மூன்று லோகமும் ஆள்பவள் நீயே 
வெண்ணி யம்மன் என்ற பெயரில் 
கோவில் கொண்டு அருள்பவன் நீயே

தங்க கிரீடம் கழுத்தில் மாலை 
கையில் தாமரை அணிந்தவளே 
சிங்கம் மீது அழகா அமர்ந்து 
அன்பர்க் கருளும் இனியவளே 
சங்கு சக்கரம் கையில் ஏந்தி 
காட்சி கொடுக்கும் வைஷ்ணவியே 
சிரித்த முகமும் சாந்த வடிவம் 
கொண்டு அருளும் பெரும்பொருளே 




ஊரை எல்லாம் காக்கும் சிங்க வாகினி 
வரம் வேண்டி வந்தவனை வென்ற மோகினி 
ஒன்பது நாள் ராத்திரியில் உந்தன் பூஜையே


மூன்று சக்தி ஒன்று சேர்ந்த வடிவமே 
மூன்று லோகம் ஆண்டு வரும் தெய்வமே 
வைஷ்ணவையே வெண்ணியம்மன் பேரிலே 
ரெட்டணையில் கோவில் கொண்ட தெய்வமே 

வெண்ணியம்மா தாயே 
காத்திடுவாய் நீயே 
வேண்டி வந்தோம் நாங்க 
உன்னை தேடி வந்தோம் நாங்க


மூன்று தேவியின் சக்தியை 
பெற்று வந்த தேவியே! 
மூன்று லோகமும் காத்திட
மண்ணில் வந்த சாமியே! 
சங்கு சக்கரம் தாங்கியே! 
சகல துன்பமும் போக்கினாய்! 
வாசல் தேடியே வந்துடும் நீக்கினாய் 


ரெட்டணையில் கோவில் கொண்ட வெண்ணியம்மா 
சப்த கன்னி ஒருத்தியான வெண்ணியம்மா 
சங்கு சக்கரம் கையில் கொண்ட வெண்ணியம்மா 
சங்கடங்கள் தீர்க்க வரும் வெண்ணியம்மா 

எங்க ஊர் வெண்ணியம்மா 
சக்தி உள்ள வெண்ணியம்மா 
கேட்ட வரம் தந்திடுவா
ஊரை காத்து நின்னுடுவா


மூன்று தேவியின் சக்தியை பெற்று வந்த தேவியே! மூன்று லோகமும் காத்திட மண்ணில் வந்த சாமியே! சங்கு சக்கரம் தாங்கினாய்! சகல துன்பமும் போக்கினாய்! ரெட்டணையில் கோவில் கொண்ட வெண்ணியம்மா சப்த கன்னி ஒருத்தியான வெண்ணியம்மா சங்கு சக்கரம் கையில் கொண்ட வெண்ணியம்மா சங்கடங்கள் தீர்க்க வரும் வெண்ணியம்மா எங்க ஊர் கன்னியம்மா சக்தி உள்ள வெண்ணியம்மா கேட்ட வரம் தந்திடுவார் ஊரை காத்து நின்னுடுவா