பாடல் 1
ஒத்தையில அரசமரம்
ஊர்நடுவே நிக்குதுங்க
பறவையினம் அத்தனையும்
பரம்பரையா தங்குதுங்க
ஒத்தையில அரசமரம்
ஊர்நடுவே நிக்குதுங்க
பறவையினம் அத்தனையும்
பரம்பரையா தங்குதுங்க
ஆறுமணி ஆச்சுதுன்னா
மாநாடு நடக்குமுங்க
கதைபேசி கதைபேசி
அத்தனையும் தூங்குமுங்க.
ஒத்தையில அரசமரம்
ஊர்நடுவே நிக்குதுங்க
பறவையினம் அத்தனையும்
பரம்பரையா தங்குதுங்க
குயிலோடு மயினாவும்
காக்காவும் குருவிகளும்
கூடுகட்டி கூடுகட்டி
தன்னினத்தை விருத்திசெய்யும்
குயிலோடு மயினாவும்
காக்காவும் குருவிகளும்
கூடுகட்டி கூடுகட்டி
தன்னினத்தை விருத்திசெய்யும்
பறவைகளின் சத்தத்துல
தாய்மொழியும் மறக்குதுங்க
இன்னிசையும் மெல்லிசையும்
அத்தனையும் தோற்குதுங்க
ஒத்தையில அரசமரம்
ஊர்நடுவே நிக்குதுங்க
பறவையினம் அத்தனையும்
பரம்பரையா தங்குதுங்க
அந்திசாயும் நேரத்துல
பறவைகளின் ஓல சத்தம்
வட்டமிட்டு வட்டமிட்டு
தன்னிடத்தைத் தேடும் சத்தம்
அந்திசாயும் நேரத்துல
பறவைகளின் ஓல சத்தம்
வட்டமிட்டு வட்டமிட்டு
தன்னிடத்தைத் தேடும் சத்தம்
நின்னிருந்த அரசமரம்
அடிசாஞ்சி போனதுங்க
மனிதர்களின் ஆசையினால்
அந்தமரம் வீழ்ந்ததுங்க......
ஒத்தையில அரசமரம்
ஊர்நடுவே நிக்குதுங்க
பறவையினம் அத்தனையும்
பரம்பரையா தங்குதுங்க
ஆறுமணி ஆச்சுதுன்னா
மாநாடு நடக்குமுங்க
கதைபேசி கதைபேசி
அத்தனையும் தூங்குமுங்க.
பாடல் 2
ஊர்நடுவே நின்னதைய்யா
ஒட்டுமொத்த கூட்டமெல்லாம்
அங்க வந்து தங்குமைய்யா
ஒத்தையில அரசமரம்
ஊர்நடுவே நின்னதைய்யா
ஒட்டுமொத்த கூட்டமெல்லாம்
அங்க வந்து தங்குமைய்யா
எட்டு திசை சோறு தேடி
உண்டு வந்த கூட்டமெல்லாம்
வக்கனைய கதைபேசி
தங்க வரும் மரமைய்யாஒத்தையில அரசமரம்
ஊர்நடுவே நின்னதைய்யா
ஒட்டுமொத்த கூட்டமெல்லாம்
அங்க வந்து தங்குமைய்யா
கொல்லிமலை காடு அது
பல்வேறு மக்களெல்லாம் ஓரிடத்தில் வாழ்வதுபோல்
சோறு தேடி நாங்க போகும்
குயிலோடு மைனாவும்
காக்கா குருவிகளும்
பரம்பரை பரம்பரையாய்
வாழ்ந்து வந்த மரமைய்யா
ஒத்தையில அரசமரம்
ஊர்நடுவே நின்னதைய்யா
ஒட்டுமொத்த கூட்டமெல்லாம்
அங்க வந்து தங்குமைய்யா
எங்களோடு சலசலப்பில்
மெல்லிசையும் தோற்றுப் போகும்
எங்கள் மொழி கேட்டிருந்தால்
பிள்ளை மொழி மறந்துவிடும்
பலமொழிகள் பேசிடுவோம்
மொழிக் கலப்பு வந்ததில்ல
சத்தம் கேட்டு ஊரெழுமே
பொழுது விடிஞ்சதுன்னு
நாளாப் பக்கமும் சோறு தேடிஒத்தையில அரசமரம்
ஊர்நடுவே நின்னதைய்யா
ஒட்டுமொத்த கூட்டமெல்லாம்
அங்க வந்து தங்குமைய்யா
வீடு விட்டு போவது போல்
மரத்தை விட்டு போனோமே
மாலை வந்து பார்க்கையிலே
நின்ன மரம் காணலையே
எங்கு செல்வதென்று
புத்திக்குள்ள தோணலையே
ஒத்தையில அரசமரம்
ஊர்நடுவே நின்னதைய்யா
ஒட்டுமொத்த கூட்டமெல்லாம்
அங்க வந்து தங்குமைய்யா
எட்டு திசை சோறு தேடி
உண்டு வந்த கூட்டமெல்லாம்
வக்கனைய கதைபேசி
தங்க வரும் மரமைய்யா