Friday, December 26, 2025

ரெட்ட மாட்டு வண்டி

ரெட்ட மாட்டு வண்டி 
ஒத்த ரோட்டு மேல
ஒன்னா சேர்ந்து போகும்
ஊரு வந்து சேரும்.

ரெட்ட மாட்டு வண்டி 
ஒத்த ரோட்டு மேல
ஒன்னா சேர்ந்து போகும்
ஊரு வந்து சேரும்.
ரெண்டு பேரும் ஒத்து  
சிந்தை ஒன்றில் வைத்து
வாழ்க்கை நடத்த வேணும் 
பேரும் சொல்ல வேணும்

ரெட்ட மாட்டு வண்டி 
ஒத்த ரோட்டு மேல
ஒன்னா சேர்ந்து போகும்
ஊரு வந்து சேரும்.

கண்ணு ரெண்டும் கூடி 
காட்சி ஒன்றைக் காட்டும்
காலு ரெண்டும் கூடி
வீட்டை கொண்டு சேர்க்கும்
கண்ணு ரெண்டும் கூடி 
காட்சி ஒன்றைக் காட்டும்
காலு ரெண்டும் கூடி
வீட்டை கொண்டு சேர்க்கும்
தண்ட வாளம் மேல
ரயிலு வண்டி ஓடும்
ரெண்டு பேரும் சேர்ந்து
வெற்றி காண வேண்டும்.

ரெட்ட மாட்டு வண்டி 
ஒத்த ரோட்டு மேல
ஒன்னா சேர்ந்து போகும்
ஊரு வந்து சேரும்.

அன்பு பாசம் வைத்து
கூடி வாழ வேண்டும்
அன்னை தந்தை சொல்லைக்
கேட்டு வாழ வேண்டும்
அன்பு பாசம் வைத்து
கூடி வாழ வேண்டும்
அன்னை தந்தை சொல்லைக்
கேட்டு வாழ வேண்டும்
ஊருக் காக அல்ல
உண்மை யாக வாழு
இந்த ஜென்மம் போதும்
இன்ப மாக வாழு

ரெட்ட மாட்டு வண்டி 
ஒத்த ரோட்டு மேல
ஒன்னா சேர்ந்து போகும்
ஊரு வந்து சேரும்.

ரெட்ட மாட்டு வண்டி 
ஒத்த ரோட்டு மேல
ஒன்னா சேர்ந்து போகும்
ஊரு வந்து சேரும்.
ரெண்டு பேரும் ஒத்து  
சிந்தை ஒன்றில் வைத்து
வாழ்க்கை நடத்த வேணும் 
பேரும் சொல்ல வேணும்









உன்பொருளென என்பொருளென
மனைவி சொல்ல நினைப்பதும்
உனதுவேலை எனதுவேலை
கணவன் சொல்லி வெறுப்பதும்


உனது பொருள் என்றும் 
எனது பொருள் என்றும் 
சொல்லி வாழ்வது நரகம்
உனது வேலை இது
எனது வேலை இது 
என்று பிரிப்பதால் வெறுக்கும்
கணவன் ஓரிடம் 
மனைவி ஒரிடம் 
வாழ்ந்த போதிலும் சிறக்கும்
அன்பு இருக்கையில் 
பிரிந்து வாழினும் 
பூவின் தேனைபோல் இனிக்கும்





ஆலம் இலையின் தண்ணீர்போல்
இருப்பது வாழ்க்கை இல்லையடா


பத்திரமா பார்த்துக்கடி பாசமிகு உள்ளம் இது எத்தனையோ ஜென்மத்துல பின்தொடர்ந்து வந்தது இது ஆக்கி வச்ச சோத்த தின்னா அத்தனையும் வாய் மணக்கும் அன்பு கொண்ட உள்ளத்தில அத்தனையும் பூ மணக்கும்