ஆலயத்தில் அமர்ந்ததுபோல்
எலுமிச்சம் மாலையிலே
காட்சிதரும் மாரியம்மா
அழகான பெண்ணொருத்தி
ஆலயத்தில் அமர்ந்ததுபோல்
எலுமிச்சம் மாலையிலே
காட்சிதரும் மாரியம்மா
ஆனந்த ரூபமாகி
அருள்தரும் அன்னையம்மா
இமயமலை வீற்றிருக்கும்
சிவனோட சத்தியம்மா
அழகான பெண்ணொருத்தி
ஆலயத்தில் அமர்ந்ததுபோல்
எலுமிச்சம் மாலையிலே
காட்சிதரும் மாரியம்மா
ரெட்டணையின் ஊர்நடுவே
சாலையோரம் அமர்ந்தவளே!
கிழக்காக முகம்நோக்கி
கருணைமழை பொழிபவளே!
ரெட்டணையின் ஊர்நடுவே
சாலையோரம் அமர்ந்தவளே!
கிழக்காக முகம்நோக்கி
கருணைமழை பொழிபவளே!
கைகளில் ஆயுதமாய்
சூலத்தை கொண்டவளே
காதுகளில் லோலாக்கு
அசைந்தாட அமர்ந்தவளே!
அழகான பெண்ணொருத்தி
ஆலயத்தில் அமர்ந்ததுபோல்
எலுமிச்சம் மாலையிலே
காட்சிதரும் மாரியம்மா
சாந்தமாக அமர்ந்திருக்கும்
சக்திவடிவம் நீயம்மா
அருள்தந்து காப்பதிலே
அன்பான தாயம்மா
சாந்தமாக அமர்ந்திருக்கும்
சக்திவடிவம் நீயம்மா
அருள்தந்து காப்பதிலே
அன்பான தாயம்மா
கைவளையல் மினுமினுக்க
கழுத்துமாலை ஜொலிஜொலிக்க
வளைந்திருக்கும் மூக்குத்தியும்
வானவில்லாய் இருக்குதம்மா
அழகான பெண்ணொருத்தி
ஆலயத்தில் அமர்ந்ததுபோல்
எலுமிச்சம் மாலையிலே
காட்சிதரும் மாரியம்மா
ஆனந்த ரூபமாகி
அருள்தரும் அன்னையம்மா
இமயமலை வீற்றிருக்கும்
சிவனோட சத்தியம்மா
அழகான பெண்ணொருத்தி
ஆலயத்தில் அமர்ந்ததுபோல்
எலுமிச்சம் மாலையிலே
காட்சிதரும் மாரியம்மா