Wednesday, February 4, 2026

பாடல் - 44 : ஒற்றைக் கொம்பனே! பானை வயிறனே!


ஒற்றைக் கொம்பனே! பானை வயிறனே! 
சுண்டல் பிரியனே! மூத்த மைந்தனே!
ஆத்து ஓரமாய்! குளத்து ஓரமாய்!
சாலை ஓரமாய் அமர்ந்தவனே! 
ஒற்றைக் கொம்பனே! பானை வயிறனே! 
சுண்டல் பிரியனே! மூத்த மைந்தனே!
ஆத்து ஓரமாய்! குளத்து ஓரமாய்!
சாலை ஓரமாய் அமர்ந்தவனே! 
ஐந்து கரத்தனே! யானை முகத்தனே!
தடைகள் நீக்கிடும் சக்தி மைந்தனே!
அரச மரத்தடி வேப்ப மரத்தடி
எலியின் மீது அமர்ந்தவனே

ஒற்றைக் கொம்பனே! பானை வயிறனே! 
சுண்டல் பிரியனே! மூத்த மைந்தனே!
ஆத்து ஓரமாய்! குளத்து ஓரமாய்!
சாலை ஓரமாய் அமர்ந்தவனே 

பாரதம் எழுதித் தந்தவனே!
பார்வதி மைந்தன் ஆனவனே!
மாம்பழம் பெற்றுச் சென்றவனே!
முருகன் ஐயன் சோதரனே!
பாரதம் எழுதித் தந்தவனே!
பார்வதி மைந்தன் ஆனவனே!
மாம்பழம் பெற்றுச் சென்றவனே!
முருகன் ஐயன் சோதரனே!
மஞ்சள் சாணம் களிமண்ணில்
பிடித்து வைத்தால் அருள்தருவாய்!
மண்ணில் எங்கும் நீ இருந்து
வெற்றிக் கனியை பரிசளிப்பாய்

ஒற்றைக் கொம்பனே! பானை வயிறனே! 
சுண்டல் பிரியனே! மூத்த மைந்தனே!
ஆத்து ஓரமாய்! குளத்து ஓரமாய்!
சாலை ஓரமாய் அமர்ந்தவனே 

ஆவணி மாதம் வளர்பிறையில்
மண்ணில் வந்த திருமகனே! 
கணங்களின் அதிபதி யாய்இருந்து
காத்து நிற்கும் ஒருமகனே!
ஆவணி மாதம் வளர்பிறையில்
மண்ணில் வந்த திருமகனே! 
கணங்களின் அதிபதி யாய்இருந்து
காத்து நிற்கும் ஒருமகனே!
உன்னை வணங்கிச் செல்பவரின் 
செயலை வெல்லச் செய்திடுவாய்
உன்னை மறந்த தந்தைக்கு 
அச்சு முறிய வைத்திடுவாய்!

ஒற்றைக் கொம்பனே! பானை வயிறனே! 
சுண்டல் பிரியனே! மூத்த மைந்தனே!
ஆத்து ஓரமாய்! குளத்து ஓரமாய்!
சாலை ஓரமாய் அமர்ந்தவனே! 
ஐந்து கரத்தனே! யானை முகத்தனே!
தடைகள் நீக்கிடும் சக்தி மைந்தனே!
அரச மரத்தடி வேப்ப மரத்தடி
எலியின் மீது அமர்ந்தவனே

ஒற்றைக் கொம்பனே! பானை வயிறனே! 
சுண்டல் பிரியனே! மூத்த மைந்தனே!
ஆத்து ஓரமாய்! குளத்து ஓரமாய்!
சாலை ஓரமாய் அமர்ந்தவனே