Wednesday, December 21, 2022

பெருமாள் போற்றி மாலை (ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 வைணவத் திருத்தல இறைவன் போற்றி)



திருவரங்கம் பள்ளிகொண்ட அரங்கா போற்றி
அரிமேய விண்ணகரம் கூத்தா போற்றி
திருஅன்பில் வடிவழகிய நம்பி போற்றி
ஆதனூரில் ஆண்டளக்கும் ஐயன் போற்றி
இந்தளூரின் பரிமளரங்க நாதா போற்றி
கண்டியூரின் கமலநாத பெருமாள் போற்றி
திருக்கண்ணங்குடி உலக நாதா போற்றி
கண்ணபுரம் நீலமேகப் பெருமாள் போற்றி
கண்ணமங்கை பத்தராவிப் பெருமாள் போற்றி
திருக்கரம்பனூர் புருசோத் தமனே போற்றி
கபித்தலத்து கசேந்திர வரதா போற்றி
காவளம்பாடி கோபாலா கிருணா போற்றி
சீர்காழி திரிவிக்கி ரமனே போற்றி
திருக்குடந்தை சாரங்க பாணி போற்றி
ஆடுதுறை வையம்காத்த பெருமாள் போற்றி
உறையூர ழகியமண வாளாப் போற்றி
சிதம்பரத்து கோவிந்த ராசாப் போற்றி
சிறுப்புலியூர் சலசயனப் பெருமாள் போற்றி
திருசெம்பொன் செய்கோயில் ரங்கா போற்றி
திருச்சேறை சாரநாதப் பெருமாள் போற்றி
திருத்தஞ்சை நீலமேகப் பெருமாள் போற்றி
தலச்சங்காடு நாண்மதியப் பெருமாள் போற்றி
தெற்றியம்பலம் அரங்க நாதப் போற்றி
திருத்தேவனார்தொகை தேவ நாதாப் போற்றி
நாதன்கோயில் நாத நாதா போற்றி
நாச்சியார்கோயில் திருநறையூர் நம்பி போற்றி
திருநாகை சௌந்தர்ய ராசா போற்றி
பார்த்தன்பள்ளி தாமரையாள் கேள்வா போற்றி
புள்ளபூதங்குடி வல்வில் ராமா போற்றி
கோவிலடி அப்பால ரங்கா போற்றி
மணிக்கூட வரதராச பெருமாள் போற்றி
மணிமாடக் கோயில் நாரணனே போற்றி
திருவண்புருடோத்தமம் புருடோத்தமா போற்றி
தேரழுந்நூர் தேவாதி ராசா போற்றி
திருவாலி திரிநகரி சிங்கா போற்றி
விண்ணகர ஒப்பில்லா அப்பா போற்றி
திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் போற்றி
திருவெள்ளறை செந்தாமரைக் கண்ணா போற்றி
வெள்ளியங்குடி கோலவில்லி ராமா போற்றி
திருவைகுந்த விண்ணகரம் வைகுந்தா போற்றி
திருக்கோவிலூர் திரிவிக்கிரமா போற்றி
திருவந்திபுரம் தெய்வ நாயகா போற்றி
அட்டபுயங்கரம் ஆதி கேசவா போற்றி
திருவிடந்தை நித்திய கல்யாணா போற்றி
திருஊரகம் உலகளந்த பெருமாள் போற்றி
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் போற்றி
திருக்கச்சி வரதராசா பெருமாள் போற்றி
கடல்மல்லை தலசயனப் பெருமாள் போற்றி
திருக்கடிகை ஆதிகேசப் பெருமாள் போற்றி
திருக்கள்வனூர் கள்வர் பெருமாள் போற்றி
திருக்காரகம் கருணா கரனே போற்றி
திருக்கார்வானம் உலக ளந்தா போற்றி
திருத்தண்கா திவ்விய பிரகாசா போற்றி
திருநிலாத்திங்கள் துண்டம் பெருமாள் போற்றி
திருநின்றவூர் பக்த ராவிப் போற்றி
திருநீரகம் உலக ளந்தா போற்றி
திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் போற்றி
திருப்பரமேச்சுர வைகுந்த நாதா போற்றி
திருப்பவள வண்ணம் பவளரே போற்றி
திருப்பாடகம் பாண்டவ தூதா போற்றி
திருப்புட்குழி விசய ராகவா போற்றி
அல்லிக்கேணி வேங்கட கிருட்ணா போற்றி
திருவெக்கா சொன்னவண்ணம் செய்தாய் போற்றி
திருவேளுக்கை அழகிய சிங்கா போற்றி
திருக்கண்ட கடிநகர் நீலமேகா போற்றி
திருச்சாளக் கிராமத்து மூர்த்தி போற்றி
திருச்சிங்க வேள்குன்றம் வரதா போற்றி
திருத்துவாரகை கல்யாண நாராயணா போற்றி
நைமிசாரண்யம் தேவ ராசா போற்றி
திருப்பிரிதி பரம புருசா போற்றி
திருவடமதுரை கோவர்த்த நேசா போற்றி
திருவதரி யாசரமம் பத்ரி போற்றி
திருஅயோத்தி சக்ரவர்த்தி ராமா போற்றி
ஆயர்ப்பாடி நவமோகன கிருட்ணா போற்றி
வேங்கடத்து கோவிந்த ராசா போற்றி
திருச்சானூர் பத்மாவதி நாதா போற்றி
திருக்கடித்தானம் அற்புத நாராயணா போற்றி
திருச்செங்குன்றூர் மகாவிட்ணு போற்றி
திருநாவாய் நாவாய் முகுந்தா போற்றி
திருப்புலியூர் மாயப் பிரானே போற்றி
திருமூழிக்குளம் இலட்சு மனனே போற்றி
திருப்பதிசாரம் திருவாழ் மார்பா போற்றி
திருவண்வண்டூர் பாம்பணை யப்பா போற்றி
திருவல்லவாழ் திருவல்லபனே போற்றி
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் போற்றி
திருவாறன்விளை திருக்குற ளப்பா போற்றி
திருவனந்தபுரம் அனந்த பத்மநாபா போற்றி
வித்துவக்கோட்டு உய்யவந்த பெருமாள் போற்றி
ஆழ்வார்திருநகரி ஆதி நாதா போற்றி
திருக்குளந்தை சீனிவாச பெருமாள் போற்றி
திருக்குறுங்குடி அழகிய நம்பி போற்றி
திருக்கூடல் கூட லழகா போற்றி
திருக்கோட்டியூர் சௌமிய பெருமாள் போற்றி
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் போற்றி
வானமாமலை தோதாத்ரி நாதா போற்றி
திருத்தண்கால் நின்ற நாராயணா போற்றி
திருத்துலைவில்லிமங்கலத்துத் தேவா போற்றி
திருப்புல்லாணி கல்யாண செகநாதா போற்றி
திருப்புளிங்குடி பூமி பாலக போற்றி
திருப்பேரை மகரநெடுங் குழைகாதன் போற்றி
திருமாலிருஞ்சோலை அழகா போற்றி
திருமயம் சத்தியமூர்த்தி மெய்யா போற்றி
திருமோகூர் காளமேகப் பெருமாள் போற்றி
நத்தம் விசயாசன பெருமாளே போற்றி
வில்லிபுத்தூர் வடபத்திர சாயி போற்றி
திருவைகுண்டம் வைகுந்த நாத போற்றி
பரமபதம் பரமபத நாதா போற்றி
திருப்பாற்கடல் சீராப்தி நாதா போற்றி

CLICK HERE DOWNLOAD Pdf Fiile