விவசாயம் பண்ண போறோம் வாங்க - நாங்க
விவசாயம் பண்ண போறோம் வாங்க
மண்ணநம்பி வாழுகின்ற கூட்டம் - நாங்க
ஊருக்கெல்லாம் சோறுபோடும் கூட்டம்
ஏற்றமின்றி வாழுகின்ற கூட்டம் - நாங்க
ஏமாந்து நிற்கின்ற கூட்டம்
விவசாயம் பண்ண போறோம் வாங்க - நாங்க
விவசாயம் பண்ண போறோம் வாங்க
வெள்ளி வரும் பொழுதிலே
ஏரைக் கொண்டு உழுகிறோம்
துள்ளிவரும் காளையை
சோர்ந்துபோக வதைக்கிறோம்
வறுமை போக நாற்றெடுத்து
சேற்றில் ஆழ நடுகிறோம்
பயிர்பச்சை கண்டபோது
உளமகிழ்ந்து சிரிக்கிறோம்
விவசாயம் பண்ண போறோம் வாங்க - நாங்க
விவசாயம் பண்ண போறோம் வாங்க
நம்பிக்கை உரமாக்கி
நாள்தோறும் உழைக்கிறோம்
களையெடுத்து நீர்பாச்சி
செழுமையாக வளர்க்கிறோம்
கதிர்கழுத்தில் கண்டபோது
மருந்தடித்து காக்கிறோம்
தலைசாய்ந்த கதிர்கண்டு
எதிர்பார்த்து நிற்கிறோம்
விவசாயம் பண்ண போறோம் வாங்க - நாங்க
விவசாயம் பண்ண போறோம் வாங்க
விளைந்தநெல்லை அறுத்தெடுத்து
களம்நிறைய குவிக்கிறோம்
தூசுதும்பு கல்நீக்கி
மூட்டைபிடித்து வைக்கிறோம்
நல்லவிலை வரும்என்று
எதிர்பார்த்து விற்கிறோம்
வந்தப்பணம் கடனடைக்க
வெறும்கையில் நிற்கிறோம்
விவசாயம் பண்ண போறோம் வாங்க - நாங்க
விவசாயம் பண்ண போறோம் வாங்க
Monday, November 17, 2025
விவசாயம் பண்ண போறோம் வாங்க
Tags
# பாடல்கள்
About தமிழ்க்கடல்
rettanainarayanakavi.blogspot.com என்ற இவ்வலைதளம் இரட்டணை நாராயணகவி எனும் புனைப்பெயர் கொண்ட முனைவர் க அரிகிருஷ்ணனின் படைப்புகளைத் தாக்கிய தளமாகும்.
பாடல்கள்
Tags:
பாடல்கள்