Tuesday, November 18, 2025

அன்னை மடியில் தலைவைப்போம்

அன்னை மடியில் தலைவைப்போம்
தந்தை சொல்லைக் கேட்டிடுவோம்
ஆசான் மூத்தோர் வழிநடப்போம்
ஆலயம் சென்று வழிபடுவோம்

அண்ணன் அக்கா உடன்பேசி
அத்தை மாமா உறவுகளில்
அன்பைப் பொழிந்து வளர்ந்திடுவோம்
அருமை உணர்ந்து பழகிடுவோம்

அன்னை மடியில் தலைவைப்போம்
தந்தை சொல்லைக் கேட்டிடுவோம்
ஆசான் மூத்தோர் வழிநடப்போம்
ஆலயம் சென்று வழிபடுவோம்

தெருவில் உள்ள நண்பருடன்
சேர்ந்து ஆடிப் பாடிடுவோம்
வரவும் செலவும் பாராமல்
வாங்கி அன்பாய் தினம்தின்போம்
தெருவே எங்கள் ஆடுகளம்
திண்ணை எங்கள் பஞ்சுமெத்தை
பிரித்து நாங்கள் பார்ப்பதில்லை
பிரிந்து என்றும் இருந்ததில்லை 

அன்னை மடியில் தலைவைப்போம்
தந்தை சொல்லைக் கேட்டிடுவோம்
ஆசான் மூத்தோர் வழிநடப்போம்
ஆலயம் சென்று வழிபடுவோம்

நல்ல துணி கண்டதில்ல
வெயில் ஒன்னும் செஞ்சதில்ல
பெத்தவங்க எங்களத்தான்
ஒத்தையில பெத்ததில்ல
வேண்டியத செஞ்சிடுவோம்
வேலி போட்டு வச்சதில்ல
பெத்தவங்க சொன்னசொல்ல
எப்பவுமே விட்டதில்ல

அன்னை மடியில் தலைவைப்போம்
தந்தை சொல்லைக் கேட்டிடுவோம்
ஆசான் மூத்தோர் வழிநடப்போம்
ஆலயம் சென்று வழிபடுவோம்