பாஞ்சாலியே!
பாஞ்சால தேசத்தில்
பிறந்தவளே!
த்ரௌபதியே! - எங்கள்
த்ரௌபதியே!
துருபதன் மகளாய்
வளர்ந்தவளே!
பாஞ்சாலியே! - எங்கள்
பாஞ்சாலியே!
பாஞ்சாலியே!
பாஞ்சால தேசத்தில்
பிறந்தவளே!
வெற்றிகொண்ட தாயே! - குளம்
காக்கவந்த தாயே!
அக்கினியில் வந்த - எங்கள்
அருமருந்தே!
துன்பமெல்லாம் போக்கி - உன்
எதிரிகளை தாக்கி
தலைமுடித்த தாயே! - எங்கள்
நாயகியே!
பாஞ்சாலியே! - எங்கள்
பாஞ்சாலியே!
நெருப்பில் தோன்றி வந்த
பாஞ்சாலியே!
பாஞ்சால தேசத்தில்
பிறந்தவளே!
கருப்பு அழகி நீயே
எட்டுத் திக்கில் உள்ள
எங்கள் குல தாயே
துன்பம் எல்லாம் போக்கி
துணை இருந்து காப்பாய்
கல்வி செல்வம் இரண்டும்
எங்க ளோடு சேர்ப்பாய்