Sunday, December 14, 2025

அழகு வடிவான அன்னை பாஞ்சாலி!

அழகு வடிவான அன்னை பாஞ்சாலி! 
கொடியும் மலரான அழகு பூஞ்சோலை! 
காலைக் கதிரான ஒளிரும் எழில்ஜோதி


குந்தி பாண்டுவின் அன்பு மருமகள்
குற்றம் களைந்திடும் கருணைத் தாயவள்
பிள்ளை போலவே நம்மை காப்பவள்
நோயும் துன்பமும் தீர்த்து வைப்பவள்
மஞ்ச சேலையில் ஆடி வருகிறாள்
துன்பம் போக்கிட தேடி வருகிறாள்
எந்தன் அன்பினில் கூடி வருகிறாள்
குலத்தைக் காக்கவே ஓடி வருகிறாள்.


யாக நெருப்பினில் தோன்றி வளர்ந்தவள்
கண்ணன் தங்கையாய் சேர்ந்து வாழ்ந்தவள்
பஞ்ச பாண்டவர் அன்பைப் பெற்றவள்
பஞ்சம் இன்றியே வாழ வைப்பவள்
சூழ்ச்சி வலையிலே மாட்டிக் கொண்டவள்
சூழ்ந்த உறவினை விட்டுச் சென்றவள்
பெண்ணின் உரிமையை சபையில் கேட்டவள்
வெற்றி கொண்டுதன் கூந்தல் முடிந்தவள்  




கொண்ட வாக்கினை போரில் வென்றவள்