Monday, December 15, 2025

தேவதையே தேவதையே

தேவதையே! தேவதையே!
கண்ணில் கண்ட தேவதையே!
சிந்தையிலே சேர்த்துவைத்த
பிம்பமாக வந்தவளே!

அந்திசாயும் நேரத்துல
ஆள்விழுங்கி போறவளே!
இத்தனைநாள் எங்கிருந்தாய்
கண்ணிலுன்னைக் காணலையே

தேவதையே தேவதையே!
கண்ணில் கண்ட தேவதையே!
சிந்தையிலே சேர்த்துவைத்த
பிம்பமாக வந்தவளே!

பூமகளே! பொன்மகளே! 
பூமியிலே! வந்தவளே! 
தேன்சிந்தும் பூவனத்தில் 
தேவதையாய் நின்றவளே! 
பாலோடு தேன்கலந்த 
சுவையாக இருப்பவளே! 
எழிலான ஓவியமே! 
எனைக்கண்டு நின்றவளே!

தேவதையே தேவதையே!
கண்ணில் கண்ட தேவதையே!
சிந்தையிலே சேர்த்துவைத்த
பிம்பமாக வந்தவளே!

பசிகண்ட உழைப்பாளி 
பால்சோறு கண்டதுபோல் 
கண்வழியாய் உண்ணுகிறேன் 
தெகிட்டவில்லை உன்அழகு 
கையில்வந்த பூச்சரமே 
பருகநின்ற தேன்குடமே
மாலைசூட எண்ணுகின்றேன்
வார்த்தை ஒன்று சொல்லாயோ

தேவதையே தேவதையே!
கண்ணில் கண்ட தேவதையே!
சிந்தையிலே சேர்த்துவைத்த
பிம்பமாக வந்தவளே!