கலைகளில் ஒன்றாய் இருப்பவளே
கதைகள் சொல்லிப் போறவளே
காந்திப் பிறந்த தேசத்தில்
அச்சம் கொண்டு நடப்பவளே
என்னைக் கொஞ்சம் பாரடியே
எடுத்துக் சொல்வேன் கேளடியே
உன்மேல் அன்பு வைத்ததினால்
பித்தனாகிப் போனேனே
காலம் கெட்டுக் கிடக்குதைய்யா
கருத்தாய் இருக்க வேணுமைய்யா
நல்லவர் கொட்டவர் யாரென்று
தெரிந்து கொள்வது கடினமைய்யா
கார்மேக மின்னல் போல
கண்ணிலே பட்டு போகும்
வெண்மதியே கொஞ்சம் நில்லு
தேர்போக ஊரார் கண்கள்
தெகிட்டாமல் பார்ப்பது போல
கண்ணிலே பட்டு போகும்
வெண்மதியே கொஞ்சம் நில்லு
தேர்போக ஊரார் கண்கள்
தெகிட்டாமல் பார்ப்பது போல
பார்க்கின்றாய் ஏனோ சொல்லு
பூந்தென்றல் காற்று போல
உன்கண்கள் தொட்டுத் தொட்டு
கதைபேசி போவதேனோ?
இழுவண்டி பின்னால் ஓடும்
தொடர்வண்டி போல எந்தன்
பின்னாலே வருவதேனோ?
உன்கண்கள் தொட்டுத் தொட்டு
கதைபேசி போவதேனோ?
இழுவண்டி பின்னால் ஓடும்
தொடர்வண்டி போல எந்தன்
பின்னாலே வருவதேனோ?
கருமேகக் கூந்தல் கொண்டு
கண்ணோடு கண்கள் பேசி
கருத்தோடு உள்ளம் சேர்ந்து
உறவாட வேண்டும்
நிலவோடு இரவும் போல
ஒன்றாக நாமும் சேர்ந்து
சுதிசேர வேண்டும்
உறவாட வேண்டும்
நிலவோடு இரவும் போல
ஒன்றாக நாமும் சேர்ந்து
சுதிசேர வேண்டும்
இல்லாத கதைகள் சொல்லி
பின்னாலே நீயும் வந்து
காலங்கள் கனியும் போது
ஒன்றாக சேர்ந்து வாழ்வோம்
பொருத்துநாம் இருப்போம் கண்ணா
வில்லேந்தி வந்த வீரன்
கையோடு இட்டுச் செல்லும்
கதைபோல ஆகும் கண்ணா
ஒன்றாக சேர்ந்து வாழ்வோம்
பொருத்துநாம் இருப்போம் கண்ணா
வில்லேந்தி வந்த வீரன்
கையோடு இட்டுச் செல்லும்
கதைபோல ஆகும் கண்ணா
பனிவிழும் நேரம்
கனவுகள் தோறும்
நினைவுகள் தோன்றும்
அடிமனம் ஏங்கும்
விழிகளில் ஆசை
மனதினில் ஓசை
கண்டிடத் துடிக்கும்
இரவினை வெறுக்கும்
உன்னோடு நானே
சேர்ந்திடத் தானே
வந்திடு வேனே
கண்டிடு தானே