Thursday, December 18, 2025

பாடல் - 25 : வெண்ணியம்மா வெண்ணியம்மா

வெண்ணியம்மா வெண்ணியம்மா
எங்க ஊரு வெண்ணியம்மா
ரெட்டணையில் கோவில் கொண்ட
வைஷ்ணவியே வெண்ணியம்மா

வெண்ணியம்மா வெண்ணியம்மா
எங்க ஊரு வெண்ணியம்மா
ரெட்டணையில் கோவில் கொண்ட
வைஷ்ணவியே வெண்ணியம்மா

ஆற்றங்கரை ஓரத்திலே
கோவில் கொண்ட வெண்ணியம்மா
வடக்கு நோக்கி அமர்ந்திருந்து
காட்சிதரும் வெண்ணியம்மா

வெண்ணியம்மா வெண்ணியம்மா
எங்க ஊரு வெண்ணியம்மா
ரெட்டணையில் கோவில் கொண்ட
வைஷ்ணவியே வெண்ணியம்மா

ஆறுகுளம் ஏரி எல்லாம்
உன்னருளால் நிரம்புதம்மா
ஊரெல்லாம் நிம்மதியாய்
கண்ணுறக்கம் கொள்ளுதம்மா
காடுவயல் மேடு எல்லாம்
பச்சை நிறம் கொண்டதம்மா
பார்த்திருக்க நெல்விளைந்து
களத்துமேடு குவிந்ததம்மா


வெண்ணியம்மா வெண்ணியம்மா
எங்க ஊரு வெண்ணியம்மா
ரெட்டணையில் கோவில் கொண்ட
வைஷ்ணவியே வெண்ணியம்மா


பௌர்ணமியில் ஊஞ்சலாட்டி
உளம்மகிழ வைக்கின்றோம்
நேர்த்திக்கடன் நிறைவேற்றி
எங்கள் கடன் முடிக்கின்றோம்
வேண்டுகிற குறைதீர்த்து
உளம்குளிர வைத்திடம்மா
வேண்டிவரும் பக்தருக்கு
உன்னாசி தந்திடம்மா

வெண்ணியம்மா வெண்ணியம்மா
எங்க ஊரு வெண்ணியம்மா
ரெட்டணையில் கோவில் கொண்ட
வைஷ்ணவியே வெண்ணியம்மா

ஆற்றங்கரை ஓரத்திலே
கோவில் கொண்ட வெண்ணியம்மா
வடக்கு நோக்கி அமர்ந்திருந்து
காட்சிதரும் வெண்ணியம்மா