Friday, December 19, 2025

இரு கரையின் நடுவிலே

ரெண்டு கரையின் நடுவுல 
படுத்திருக்கும் வடிவில 
அரங்கனின் அழகைக் பாரு
ரெண்டு ஆறு நடுவுல 
நின்ற கோல வடிவில 
அழகனின் அழகைக் பாரு

வரதராஜன் புகழினை 
விரும்பி நானும் பாடிட 
கூட சேர்ந்து பாடிடலாம் வாங்க
அள்ளி அள்ளி கொடுத்திடும் 
அன்பு உள்ளம் கொண்டவன் 
ரெட்டணையில் இருப்பவன் தாங்க

ரெண்டு கரையின் நடுவுல 
படுத்திருக்கும் வடிவில 
அரங்கனின் அழகைக் பாரு
ரெண்டு ஆறு நடுவுல 
நின்ற கோல வடிவில 
அழகனின் அழகைக் பாரு

கொடியில் பூத்ததை மாலை ஆக்கிதன் 
கழுத்தில் சூடினாள் கோதை. 
கொடிய அரக்கரை உதைத்து நொறுக்கிதன் 
பகைமை வென்றவன் பேதை. 
சிறையில் பூத்தவன் தாயை மாற்றிட 
விரைந்து சென்றவன் மாயன்.
திறந்த வாயிலே உலகைக் காட்டியே
இறைவன் என்றவன் சேயன்.

ரெண்டு கரையின் நடுவுல 
படுத்திருக்கும் வடிவில 
அரங்கனின் அழகைக் பாரு
ரெண்டு ஆறு நடுவுல 
நின்ற கோல வடிவில 
அழகனின் அழகைக் பாரு

கையில் குழலுடன் ஓசை ஊட்டியே 
மாடு மேய்த்தவன் கண்ணன் 
சேயின் குரல்என விரைந்து ஓடியே 
ஆடை தந்தவன் அண்ணன்
நீல நிறத்திலே பூத்த மலர்என 
அழகு வடிவான அவனே 
கோலம் மாற்றிட பெண்ணின் அழகிலே
மயங்கி வந்தவன் சிவனே

ரெண்டு கரையின் நடுவுல 
படுத்திருக்கும் வடிவில 
அரங்கனின் அழகைக் பாரு
ரெண்டு ஆறு நடுவுல 
நின்ற கோல வடிவில 
அழகனின் அழகைக் பாரு








வரதராஜனின் புகழினை 
விரும்பி இசையுடன் பாடினேன்
சேர்ந்து பாடிட வாங்க 
அவன் இருக்கும் இடத்தினை 
மனம் விரும்பி சொல்கிறேன்
அதுநம் ரெட்டணை தாங்க


வரதராஜனின் புகழினை 
விரும்பி இசையுடன் பாடினேன்
சேர்ந்து பாடிட வாங்க 
அவன் இருக்கும் இடத்தினை 
மனம் விரும்பி சொல்கிறேன்
அதுநம் ரெட்டணை தாங்க

இரு கரையின் நடுவிலே
தலை சாய்ந்த வடிவிலே
சி வழங்குவான் அரங்கன்
இரு ஆற்றின் நடுவிலே நின்ற கோல வடிவிலே
ஆசி வழங்குவான் அழகன்

மாலை சூடிய கோதை நெஞ்சிலே 
வந்து சேர்ந்தவன் மாயவன் 
பாலை தந்தவர் பேயர் என்றதும் 
சேயவன்