Friday, December 26, 2025

காலில் சலங்கை கட்டி

 காலில் சலங்கை கட்டி

கை நிறைய வளையல் எட்டு
வீதியிலே ஆடி வரா
குங்குமக்காரி - அவ
வினைகளை தீர்த்து வைப்பாள்
மங்கள நீலி

ஆசை அடக்கி வைக்கும்
அன்பருக்கு அருள் வழங்கி
பாசத்திலே மூழ்கடிப்பாள்
வேப்பிலைக்காரி - அவ
தேடி வந்து அருள் தருவாள்
ரெட்டணை தேவி