Tuesday, December 30, 2025

மாரி சரஸ்வதி லட்சுமி தாயே!

மாரி சரஸ்வதி லட்சுமி தாயே!
எங்களைக் காத்திட வந்திடுவாயே!
வீரம் கல்வி செல்வமும் தந்து
குடும்பம் தழைத்திட செய்திடு தாயே!

மாரி சரஸ்வதி லட்சுமி தாயே!
எங்களைக் காத்திட வந்திடுவாயே!

தீமை அழிக்கும் சக்தியின் வடிவம் 
தாமே வந்து அருளும் தெய்வம் 
மூவரும் ஒன்றாய் இருக்கும் இடத்தில் 
மகிழ்ச்சி பொங்கும் கவலையும் விலகும்

மாரி சரஸ்வதி லட்சுமி தாயே!
எங்களைக் காத்திட வந்திடுவாயே!

சிவனின் பாதியாய் இருப்பவளோ? - புவி 
வீரம் தழைத்திட அருள் தருவாள் 
வீணை கையில் ஏந்தியவள் - பல 
கல்வி அறிவினை தந்திடுவாள் 
தாமரை மலரில் அமர்ந்தவளோ? - நலம் 
நல்கும் செல்வம் அளித்திடுவாள்
இந்த மூன்றும் இருக்கும் குடும்பத்தினை 
யாரும் வென்றிட முடியாதே

மாரி சரஸ்வதி லட்சுமி தாயே!
எங்களைக் காத்திட வந்திடுவாயே!

மலைமகள் அலைமகள் கலைமகள் என்று 
புவிதனில் சொல்வார் உங்களை நன்று
சிவனோடு நான்முகன் திருமால் மூவரும் 
தம்தொழில் செய்து உன்னுடன் இருப்பார் 
மூன்று தேவிகள் தனித்தனி யாக 
கோவில் கொண்டு இருப்பது உண்டு 
மூவரும் வந்து இல்லம் புகுந்து
ஆசிகள் தந்து காத்திட வேண்டும்

மாரி சரஸ்வதி லட்சுமி தாயே!
எங்களைக் காத்திட வந்திடுவாயே!
வீரம் கல்வி செல்வமும் தந்து
குடும்பம் தழைத்திட செய்திடு தாயே!

மாரி சரஸ்வதி லட்சுமி தாயே!
எங்களைக் காத்திட வந்திடுவாயே!