Thursday, December 4, 2025

சொட்டுச் சொட்டுச் சொட்டாக

[Verse - Female Voice]
சொட்டுச் சொட்டுச் சொட்டாக
பூமி வந்து சேர்ந்தாயே!
பட்டுப் பட்டுப் பூமியினை
மெல்ல மெல்ல நனைத்தாயே!

[Verse - Male Voice]
சொட்டுச் சொட்டுச் சொட்டாக
பூமி வந்து சேர்ந்தாயே!
பட்டுப் பட்டுப் பூமியினை
மெல்ல மெல்ல நனைத்தாயே!

[Verse - Male Voice]
திருட்டு விதையை மரம் ஆக்கி 
பூமி எங்கும் தழைத்தாயே!
உன்னால் பூமி நிறம் மாறி 
பச்சை வண்ணம் பூசியதே!


[Verse - Female Voice]
சொட்டுச் சொட்டுச் சொட்டாக
பூமி வந்து சேர்ந்தாயே!
பட்டுப் பட்டுப் பூமியினை
மெல்ல மெல்ல நனைத்தாயே!



[Verse - Male Voice]
உன்னால் பூமி குளிர்கிறது 
நீ இல்லாவிட்டால் எரிகிறது 
வள்ளல் என்று உன்னைசொல்வார் 
மிகுந்தால் அவரே குறைசொல்வார் 
மேகம் திரட்டி பொழிகின்றாய் 
உயிரின் தாகம் தணிக்கின்றாய் 
உணவாய் நீயே இருக்கின்றாய் 
உணவுப் பொருளை தருகின்றாய் 

[Verse - Female Voice]
சொட்டுச் சொட்டுச் சொட்டாக
பூமி வந்து சேர்ந்தாயே!
பட்டுப் பட்டுப் பூமியினை
மெல்ல மெல்ல நனைத்தாயே!

[Verse - Male Voice]
ஏரி குளங்கள் திருவோடாய் 
ஏந்தி உன்னை அழைக்கையிலே 
ஏமாற்றங்கள் தருகின்றாய் 
வாட்டி வதைக்கி ரசிக்கின்றாய் 
வேண்டாம் என்று நினைக்கையிலே 
வெறுப்பு கொள்ள பெய்கின்றாய் 
எங்கிருந்து வந்தாயோ 
மீண்டும் அங்கே செல்கின்றாய்

[Verse - Female Voice]
சொட்டுச் சொட்டுச் சொட்டாக
பூமி வந்து சேர்ந்தாயே!
பட்டுப் பட்டுப் பூமியினை
மெல்ல மெல்ல நனைத்தாயே!

[Verse - Male Voice]
திருட்டு விதையை மரம் ஆக்கி 
பூமி எங்கும் தழைத்தாயே!
உன்னால் பூமி நிறம் மாறி 
பச்சை வண்ணம் பூசியதே!