Tuesday, January 13, 2026

பொங்கல் வருது பொங்கல் வருது

பொங்கல் வருது பொங்கல் வருது 
துள்ளிவரும் காளைபோல 
புன்னகையும் பொங்கிவருது 
எங்களோட ஆசைபோல 
பொங்கல் வருது பொங்கல் வருது
துள்ளிவரும் காளைபோல 
புன்னகையும் பொங்கிவருது 
எங்களோட ஆசைபோல 
சின்ன சின்ன சொல்லெடுத்து 
பொங்கலைநான் பாடபோறேன் 
வண்ணவண்ண பூத்தொடுத்து 
மாலையாக சூடபோறேன் 

பொங்கல் வருது பொங்கல் வருது 
துள்ளிவரும் காளைபோல 
புன்னகையும் பொங்கிவருது 
எங்களோட ஆசைபோல

புத்தாடை கட்டிக்கொண்ட 
புதுவீட்டு வாசலிலே 
புதுமா கோலம் இட்டு
புதுபானை அடுப்புமூட்டி 
புது அரிசி பாலுமிட்டு 
பொங்கிவர ஒன்றுகூடி 
பொங்கல் என்று கூவிடுவோம்
ஒன்றுசேர்ந்த ஆடிடுவோம்
பொங்கல் என்று கூவிடுவோம்
ஒன்றுசேர்ந்த ஆடிடுவோம்

பொங்கல் வருது பொங்கல் வருது 
துள்ளிவரும் காளை போல 
புன்னகையும் பொங்கி வருது 
எங்களோட ஆசை போல 

மஞ்சள் கொத்து கட்டி 
மாமரத்து இலையும் கட்டி 
இஞ்சியோடு கரும்புவைத்து
நெல்மணிகள் சேர்த்துவைத்து
பூசணிக்காய் கூட்டு வைத்து 
பொரியலோடு குழம்பு வைத்து 
சூரியனை கூப்பிடுவோம் 
சோறுபோட்டு நன்றிசொல்வோம் 
சூரியனை கூப்பிடுவோம் 
சோறுபோட்டு நன்றிசொல்வோம் 

பொங்கல் வருது பொங்கல் வருது 
துள்ளிவரும் காளை போல 
புன்னகையும் பொங்கி வருது 
எங்களோட ஆசை போல 

நெல்விளைந்த பூமிஎல்லாம் 
ஒய்யார மாய்நடந்து 
பொங்கதண்ணி நீர்தெளித்து 
பூமிக்கு நன்றிசொல்வோம். 
எங்க வீட்டு தோழனான 
மாட்டுக்குமே நன்றி சொல்வோம்
பெரியோர்கள் ஆசிபெற்று 
புன்னகையைப் பூத்துநிற்போம் 
பெரியோர்கள் ஆசிபெற்று 
புன்னகையைப் பூத்துநிற்போம் 

பொங்கல் வருது பொங்கல் வருது 
துள்ளிவரும் காளைபோல 
புன்னகையும் பொங்கிவருது 
எங்களோட ஆசைபோல 
பொங்கல் வருது பொங்கல் வருது
துள்ளிவரும் காளைபோல 
புன்னகையும் பொங்கிவருது 
எங்களோட ஆசைபோல 
சின்ன சின்ன சொல்லெடுத்து 
பொங்கலைநான் பாடபோறேன் 
வண்ணவண்ண பூத்தொடுத்து 
மாலையாக சூடபோறேன்