Wednesday, January 14, 2026

நல்ல தண்ணி கொளத்துமேல

நல்ல தண்ணி கொளத்துமேல 
ஊரின் எல்லை ஓரத்துல 
கோவில் கொண்ட பெரியாண்டவா
வேண்டுகிறோம் உங்களையே

நல்ல தண்ணி கொளத்துமேல 
ஊரின் எல்லை ஓரத்துல 
கோவில் கொண்ட பெரியாண்டவா
வேண்டுகிறோம் உங்களையே
மனிதனாக வந்தவரே 
காக்கும் தொழில் கொண்டவரே 
நாளும் நாளும் வேண்டிடுவோம் 
நாலு பேருக்கு சொல்லிடுவோம்.

நல்ல தண்ணி கொளத்துமேல 
ஊரின் எல்லை ஓரத்துல 
கோவில் கொண்ட பெரியாண்டவா
வேண்டுகிறோம் உங்களையே

வெள்ளிமலை வீதியிலே
சூலம் ஏந்தி நின்றவனே 
பம்பை சத்தம் கேட்கையிலே 
ஆட்டம் ஆடி வந்தவனே 
ரெட்டணையில் கோவில் கொண்டு 
எல்லை காக்க நின்றவனே 
எங்களுக்கு காட்சி தந்து 
வேண்டும் வரம் தந்தவனே

நல்ல தண்ணி கொளத்துமேல 
ஊரின் எல்லை ஓரத்துல 
கோவில் கொண்ட பெரியாண்டவா
வேண்டுகிறோம் உங்களையே

வெள்ளிநிலா தலையில் வைத்து 
கங்கையினை ஒளித்து வைத்து 
உடம்பெல்லாம் நீறு பூசி 
பிச்சை ஏற்று வாழ்ந்தவனே 
குலம் காக்கும் தெய்வமாகி 
எங்கள் குறை தீர்ப்பவனே 
குடும்பத்தோடு உன்னை காண 
தேடி இங்கு வந்தோமைய்யா

நல்ல தண்ணி கொளத்துமேல 
ஊரின் எல்லை ஓரத்துல 
கோவில் கொண்ட பெரியாண்டவா
வேண்டுகிறோம் உங்களையே
மனிதனாக வந்தவரே 
காக்கும் தொழில் கொண்டவரே 
நாளும் நாளும் வேண்டிடுவோம் 
நாலு பேருக்கு சொல்லிடுவோம்.

நல்ல தண்ணி கொளத்துமேல 
ஊரின் எல்லை ஓரத்துல 
கோவில் கொண்ட பெரியாண்டவா
வேண்டுகிறோம் உங்களையே