Friday, January 16, 2026

காசு பணம் மேல

காசு பணம்மேல 
ஆச வச்சதால 
பாச மெல்லாம் போச்சு 
பந்தம் விட்டு போச்சு 
காசு பணம் மேல 
ஆச வச்சதால 
பாச மெல்லாம் போச்சு 
பந்தம் விட்டு போச்சு 
உரிமைகளைக் கேட்டு
உறவுகளை விட்டு 
தனிமையாக நின்னோம்
தாய் உறவைக் கொன்னோம்

காசு பணம்மேல 
ஆச வச்சதால 
பாச மெல்லாம் போச்சு 
பந்தம் விட்டு போச்சு 

அண்ணன் தம்பி பாசம் 
ஆயுள் வரை வீசும்
அக்கா தங்கை யோட 
அன்பு இன்னும் பேசும் 
அண்ணன் தம்பி பாசம் 
ஆயுள் வரை வீசும்
அக்கா தங்கை யோட 
அன்பு இன்னும் பேசும் 
மூத்தவங்க சொல்லை 
கேட்டு வந்த காலம் 
தனிமனித ஒழுக்கம்
இருந்த அந்த காலம்

காசு பணம்மேல 
ஆச வச்சதால 
பாச மெல்லாம் போச்சு 
பந்தம் விட்டு போச்சு 

தாய் தந்த உறவு 
உடன்பிறப்புதாங்க 
மத்த உறவு எல்லாம் 
வந்து போகும்தாங்க 
தாய் தந்த உறவு 
உடன்பிறப்புதாங்க 
மத்த உறவு எல்லாம் 
வந்து போகும்தாங்க 
மாசில்லாத அன்பு 
உறவில் மட்டும்தாங்க 
நேசம் வச்சிபாரு 
நோயும் ஓடிப்போகும்.

காசு பணம்மேல 
ஆச வச்சதால 
பாச மெல்லாம் போச்சு 
பந்தம் விட்டு போச்சு 
உரிமைகளைக் கேட்டு
உறவுகளை விட்டு 
தனிமையாக நின்னோம்
தாய் உறவைக் கொன்னோம்
காசு பணம்மேல 
ஆச வச்சதால 
பாச மெல்லாம் போச்சு 
பந்தம் விட்டு போச்சு