Wednesday, January 21, 2026

தந்தை உடன் பிறப்பால்

தந்தை உடன் பிறப்பால் வந்த உறவு இது 
தனித்த கொடி என்னை வளர்க்கும் கொழுகொம்பு 
விண்ணைத் தொடுவதற்கு ஊக்கி விடும் அம்பு 
நீயே எந்தன் வாழ்வின் புதுத் தெம்பு

வீரன் பெயரை தன் பெயராய் பெற்று ஒருவர் நீயன்றோ! 
பெயரின் குணத்திற்கு ஏற்றபடி காத்து நிற்கும் தாயன்றோ! 
தேவையறிந்து கொடுக்கின்ற என்னுள் வாழும் இறையன்றோ! 
பார்த்து பார்த்து ரசிக்கின்ற நலன் விரும்பி தானன்றோ!

அழகிய உறவாய் அன்பின் வடிவாய் பழகி வந்த துணைநீயே! 
நயந்த மொழியால் வியந்து மகிழும் நெருங்கி வந்த இறைநீயே