பொருளாளர்
அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம்
காக்கைபாடினியம்
காக்கைபாடினியர்
காக்கைபாடினியர் யார்?
காக்கைபாடினியம்
மறைந்து போல நூல்களுள் ஒன்றான காக்கைபாடினியம் யாப்பருங்கல விருத்தி உரையால் உருவான ஒரு நூல்.
இது யாப்பிலக்கணம் மட்டும் கூறும் நூல்
கிடைக்கப்பெற்ற காக்கைபாடினிய நூற்பாக்கள் 76 அதன் அடிகள் 216
- எழுத்து - 13
- அசை - 2
- சீர்
- தளை
- அடி
- தொடை
1. எழுத்து (13)
- குறில்
- நெடில்
- அளபெடை
- உயிர்
- மெய்
- உயிர்மெய்
- வல்லினம்
- மெல்லினம்
- இடையினம்
- ஆய்தம்
- குற்றியலிகரம்
- குற்றியலுகரம்
- ஐகாகரக்குறுக்கம் (நூ. 1)
எழுத்துகளின் சிறப்பு விதிகள்
- ஆய்தம், ஒற்று இரண்டு எழுத்துகளும் அளபெடுக்கும் போது மட்டும் அலகு பெறும் (நூ. 2)
- குற்றியலிகரம், குற்றியலுகரம் இரண்டும் சீரும் தளையும் சிதைகின்ற காலத்து அளகு பெறாது. ஒற்றெழுத்து போலவே கருதப்படும். (நூ. 3)
- உயிரளபெடை சீரும் தளையும் சிதைகின்ற காலத்து நெடில் எழுத்தாக மட்டுமே அலகு பெறும். (நூ. 4)
2. அசை
- தனியசை - நேரசை
- இணையசை - நிரையசை(நூ. 5)
- ஒற்றெழுத்துக்கள் நீங்களாக தனித்து வரும் அசை - தனியசை
- இரண்டு எழுத்துகள் இணைந்து வரும் அசை - இணையசை
இணையசை ஆகாதவை
- நேடிலோடு நெடிலும் நெடிலோடு குறிலும் சேர்ந்து வரும் (ஆரா காடு) என்பன இணையசை ஆகாது. (நூ. 6)
ஐகாரத்திற்குச் சிறப்பு விதி
முதலில் வரும் ஐ நெடிலாகவும் அதாவது தனியசையாகவும் இடை, கடை ஆகிய இடங்களில் வரும் ஐகாரம் குறிலாகவும் (இணையசையாகவும் கொள்ளுதல் வேண்டும். (நூ.7)
3. சீர்
ஆசிரிய உரிச்சீர்
ஈரசைகளால் வரும் நான்கு சீரும் இயற்சீர் எனப்படும்.(நூ. 8)
- நேர் நேர்
- நிரை நேர்
- நிரை நிரை
- நேர் நிரை
இயற்சீர் எனப்படும் ஈரசைச் சீர்கள் ஆசிரிய உரிச்சீராகும்.(நூ. 9)
வெண்பா, வஞ்சி உரிச்சீர்கள்
மூவசைகளாக வரும் எட்டு சீர்களுள் தனி (நேர்) அசைகளாக வரும் நான்கும் வெண்பா உரிச்சீராகவும் இணை (நிரை) அசைகளாக வரும் நான்கும் வஞ்சி உரிச்சீராகவும் கொள்ளப்படும். (நூ. 10)
வெண்பா உரிச்சீர்கள்
நேர் நேர் நேர் - தேமாங்காய்
நிரை நேர் நேர் - புளிமாங்காய்
நிரை நிரை நேர் - கருவிளங்காய்
நேர் நிரை நேர் - கூவிளங்காய்
வஞ்சி உரிச்சீர்கள்
நேர் நேர் நிரை - தேமாங்கனி
நிரை நேர் நிரை - புளிமாங்கனி
நிரை நிரை நிரை - கருவிளங்கனி
நேர் நிரை நிரை - கூவிளங்கனி
இயற்சீர், உரிச்சீர் வரும் இடங்கள்
இயற்சீர், உரிச்சீர் என்பன நால்வகைப் பாக்களிலும் மூன்று இனங்களிலும் மயங்கி வரும். (நூ. 11)
இயற்சீர், உரிச்சீர் வரும் இடங்களுக்கான சிறப்பு விதி
ஆசிரியப்பா, வெண்பா ஆகிய இரண்டிலும் ஆசிரிய உரிச்சீரான இயற்சீரும் வெண்பா உரிச்சீர்களான காய்ச்சீரும் விரவி வரும்.
கலிப்பா, வஞ்சிப்பாக்களில் தனி அசையில் முடியும் (மாச்சீர்) வாரா.(நூ. 12)
மேலும் இணைசீர் நடுவாக உடைய ( நிரை நடுவாகிய ) விளங்கனிச் சீர்கள் ஆசிரியப்பாவில் வருதல் இல்லை.(நூ. 13)
நாலசைச்சீரும் ஒரசைச்சீரும்
தண்பூ, தண்நிழல், நறும்பூ, நறுநிழல் எனவரும் நாலசைச்சீர் (16), நேர், நிரை எனவரும் ஓரசைச்சீர்கள்(2) ஆகிய பதிணெட்டும் சிற்சில இலங்களில் வரும்.(நூ. 14)
நாலசைச்சீர்கள் செய்யுளில் வருமாறு
நாலசைச்சீர்கள் வஞ்சிப்பாவில் ஓரடியில் இரண்டு இணைந்தும் ஏனைய பாக்களில் ஒன்றாகவும் வரும். ஆயினும். நிரையென முடியும் நாலசைச்சீர்கள் வஞ்சிப்பாவிற்கே உரியதாகும். (நூ. 15)
தளை
இயற்சீர்கள் இரண்டும் கூடி தம்முள் விகற்பம் (மாறுபடாமல்) இல்லாமல் விரவி வருவன ஆசிரியத்தளை ஆகும்.(நூ. 16)
இயற்சீர் இரண்டும் தம்முள் ஒன்றாமல் வருவது இயற்சீர் வெண்டளை. (நூ. 17)
வெண்பா உரிச்சீரோடு ஒன்றி வருவது வெண்டளை. (நூ. 18)
வெண்பா உரிச்சீரோடு இணைசீர்(நிரை) ஒன்றுவது கலித்தளை. (நூ. 19)
இணையசை இறுதியாக உடைய மூவசைச்சீர்கள் தம்முள் ஒன்றியும் ஒன்றாமலும் வருவது வஞ்சித்தளை. (நூ. 20)
5. அடி
குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என அடி ஐந்து வகையாகும். (நூ. 21)
அடி அளவு
குறளடி - இருசீரடி
சிந்தடி - முச்சீரடி
அளவடி - நாற்சீரடி
நெடிலடி - ஐஞ்சீரடி
கழிநெடிலடி - அறுசீரடி(நூ. 22)
கழிநெடிலடிக்கு மேலும் ஒர் அளவு
எண்சீரடி, எழுசீரடியும் கழிநெடிலடியாகக் கொள்ளப்படும். (நூ. 23)
எண்சீரின் மிக்குவரும் கழிநெடிலடிகள்
இரண்டு சீர்கள் முதலாக எட்டு சீர்கள் ஈறாக உள்ள அடிகள் சிறப்புடையன. இந்த எட்டு சீரினும் மிகுந்து வரும் சீர்களால் உடைய அடிகள் சிறப்புடையன அல்ல. (நூ. 24)
வஞ்சிப்பாவிற்கு வரும் அடிகள்
சிந்தடி, குறளடி ஆகிய இரண்டும் வஞ்சிப்பாவிற்கு உரியன. (நூ. 25)
அகவல், வெள்ளை, கலிப்பாக்களுக்கு வரும் அடிகள்
மூவகைப் பாக்களும் நாற்சீர் அடிகளைக் கொண்டு அமையும். (நூ. 26)
இந்த மூவகைப் பாக்களில் சிந்தடி, குறளடி வருதலும் உண்டு. (நூ. 27)
பாவினங்களுக்கு வரும் அடிவகை
விருத்தம், துறை, தாழிசை எனப்படும் பாவினங்கள் மூன்றும் குறளடி முதலாக அனைத்து அடிகளாலும் அமையும். (நூ. 28)
பாக்களின் அடிச்சிறுமை
வெண்பா - இரண்டடி
ஆசிரியப்பா - மூன்றடி
வஞ்சிப்பா - மூன்றடி (நூ. 29)
கலிப்பா - நான்கடி (நூ. 30)
பாக்களின் அடிப் பெருமை
புலவலின் குறிப்பளவே பாக்களின் பெருமை அளவு (நூ. 31)
6. தொடை
- எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றும் ஒருங்கு அமைந்து, அடியோடு அடி தொடுக்கப் பெறுதல் தொடை. (அடியோடு அடி கட்டுவது தொடை.) (நூ. 32)
அடிமோனை அடி எதுகைத் தொடைகள்
- முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை
- இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை
- ஓர் எழுத்தின் வருக்கமும் இனமும் வந்து ஒன்றினும் மொனை எதுகை எனக் கொள்ளப்படும்.அதாவது இனமொனை வருக்கமோனை, இன எதுகை வருக்க எதுகை என்பன (நூ. 33)
எதுகைக்கு மேலும் ஒரு சிறப்பு விதி
- ய்,ர்,ல்,ழ் ஆகிய நான்கு ஒற்றுகளும் எதுகையாக நிற்பது மட்டுமல்லாமல் மோனைக்கும் எதுகைக்கும் இடையில் வரின் அதனை ஆசிடை எதுகையாகக் கொள்ளப்படும்.
- எடுத்துக்காட்டாக, காய்மாண்ட, பூமாண்ட ஆகிய இரண்டு சொற்களில் எதுகையாக மா வந்துள்ளது எனினும் முதல் சொல்லில் காய்மாண்ட என ய் ஒன்று வந்துள்ளது. இதனை எதுகையாகக் கொள்ளாமல் ஆசிடை எதுகையாகக் கொள்ள வேண்டும். (நூ. 34)
முரண்தொடை
- அடிதோறும் சொல்லாலும் பொருளாலும் முரண்பட்டு வருவது முரண்தொடை எனப்படும். (நூ. 35)
இயைபுத்தொடை
- அடிதோறும் இறுதி ஒன்றி வருவது இயைபுத் தொடையாகும். (நூ. 36)
அளபெடைத்தொடை
- அடிதோறும் மாத்திரை அளபெடுத்து வருவது அளபெடைத்தொடை எனப்படும். (நூ. 37)
இணைத்தொடை
- முதல் சீரும் இரண்டாம் சீரும் மோனை முதலாகத் தொடுப்பது இணைத்தொடை எனப்படும். (நூ. 38)
பொழிப்பு ஒரூஉ தொடைகள்
- முதல்சீரும் மூன்றாம் சீரும் மோனை முதலாகத் தொடுப்பது பொழிப்புத்தொடை எனப்படும். (நூ. 39)
- முதல்சீரும் நான்காம் சீரும் மோனை முதலாகத் தொடுப்பது ஒரூஉத்தொடை எனப்படும். (நூ. 39)
மேற்கதுவாய் கீழ்க்கதுவாய்த் தொடைகள்
- ஒன்று, மூன்று, நான்கு ஆகிய சீர்களில் மோனை முதலாகத் தொடுப்பது மேற்கதுவாய்த்தொடை எனப்படும். (நூ. 40)
- ஒன்று, இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் மோனை முதலாகத் தொடுப்பது கீழ்க்கதுவாய்த்தொடை எனப்படும். (நூ. 40)
கூழை, முற்று தொடைகள்
- முதல் மூன்று சீர்களில் மோனை முதலாகத் தொடுப்பது கூழைத்தொடை எனப்படும். (நூ. 41)
- அடியின் அனைத்து சீர்களில் மோனை முதலாகத் தொடுப்பது கூழைத்தொடை எனப்படும். (நூ. 41)
இரட்டைத் தொடை
- அடி முழுவதும் ஒரே சீர் (சொல்) அடிமுழுதும் வருவது இரட்டைத் தொடை எனப்படும். (நூ. 42)
அந்தாதித் தொடை
- அசையால் ஆயினும் சீரால் ஆயினும் அடிதோறும் இறுதிக்கண் நின்றது அடுத்த அடியின் முதலாக அமைவது அந்தாதித் தோடை எனப்படும்.(நூ. 43)
செந்தொடை
- மோனை, எதுகை, இயைபு, முரண் போன்ற செயற்கையான தொடை நயங்கள் (அணிகள்) ஏதுமின்றி, சொற்களின் இயல்பான ஓசை நயத்தினால் அழகுற அமையும் செய்யுள் வகையாகும்.(நூ. 44)
- செம்மை அடையாத தொடையை செந்தொடை என்றனர்.
தொடைகளுக்கான சிறப்பு விதி
- ஒரு செய்யுளில் பலவகைத் தொடைகளும் அடிகளும் வந்தால் அதன் முதலில் வந்த தொடையாலோ அடியாலோ அதற்குப் பெயரிட்டு கூறப்படும். (நூ. 45)
2. செய்யுளியல்
வெண்பாவும் அதன் வகையும்
- சிறந்து உயர்ந்த செப்பலோசை அன்றி வேறு ஓசையால் வராதது வெண்பாவாகும். (நூ. 46)
- வெண்டளைகள் அன்றி வேறுத்தளைகள் வாரா.
வெண்பாவின் ஈற்றடி
- வெண்பாவின் ஈற்று அடி முச்சீர் அடியாய் வரும். அம்முச்சீர் அடியின் மூன்றாவது சீர் அசைச்சீராக வரும். (நூ. 47)
குறள் வெண்பா
- வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று ஒரு தொடையில் இரண்டடியாய் அமைவது குறள்வெண்பாவாகும். (நூ. 48)
சிந்தியல் வெண்பா
- இரண்டு தொடையினவாகிய மூன்றடிகளால் அமைவது சிந்தியல் வெண்பாவாகும். (நூ. 49)
நேரிசை வெண்பா
- இரண்டாம் அடியின் இறுதிசீர் ஒரூஉத் தொடைப் பெற்று, ஒரு விகற்பத்தாலோ பல பல விகற்பத்தாலோ அமைந்து, இரண்டு துண்டாய் இணைந்த ஆடையைப் போல நேரிசை வெண்பா அமையும். (நூ. 50)
இன்னிசை வெண்பா
- நான்கடியாய் தன்சொல் இன்றி ஒரு விகற்பம் பெற்றோ பல விகற்பம் பெற்றோ வருவது இன்னிசை வெண்பாவாகும். (நூ. 51)
பஃறொடை வெண்பா
- தொடையும் அடியும் இத்துனை என்று இல்லாமல் வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று அமைவது பஃறொடை வெண்பாவாகும். (நூ. 52)
வெண்பாவின் இனம்
வெண்பாவிற்கு விருத்தம், துறை, தாழிசை என்ற மூன்று இனங்களும் உண்டு. இது பாவின் பெயரும் இனத்தின் பெயரும் தழுவி அழைக்கப்படும். (நூ. 53)
குறள்வெண் செந்துறை
*வாசகர்களுக்கு வணக்கம்*
தமிழ்க்கடல் வலைதளத்தை சமூக வலைதளங்களில் தொடர கீழே உள்ள லிங்குகளை Click செய்யவும்.
*WhatsApp-ல் Follow செய்ய* https://whatsapp.com/channel/0029Va4r8LdCHDymT0UsdE0p
*YouTube-ல் Subscribe செய்ய*
*YouTube-ல் Subscribe செய்ய*https://www.youtube.com/@THAMIZHKADALTECH
*Telegram - ல் Follow செய்ய*https://t.me/thamizhkadaloffical
*அரட்டை - ல் Follow செய்ய*
*Facebook-ல் Follow செய்ய*
5. உ. ஆசிரியப்பாவும் அதன் வகையும் 2. கலிப்பாவும் அதன் வகையும் ச. வஞ்சிப்பாவும் அதன் வகையும் ரு. மருட்பா 3. பொதுவியல் க. தனிச்சொல் உ. புறநடை ங. பொருள்கோள் ச. விகாரம் ரு. குறிப்பிசை