Tuesday, February 10, 2026

பாடல் - 46 : மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா!


மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா! 
பூங்கரகம் எடுத்துவந்தோம் ஊர்கோலமாய் 
மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா! 
பூங்கரகம் எடுத்துவந்தோம் ஊர்கோலமாய் 
சிலம்பொலியில் உன்பெருமை பாடுகிறேன் 
நீ இல்லாத இடத்தினையே தேடுகிறேன்
சிலம்பொலியில் உன்பெருமை பாடுகிறேன் 
நீ இல்லாத இடத்தினையே தேடுகிறேன்

மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா! 
பூங்கரகம் எடுத்துவந்தோம் ஊர்கோலமாய் 

ரெட்டணையில் குடியிருக்கும் அங்காளியே! 
பார்வதியின் மறுஉருவாய் வந்தவளே 
ரெட்டணையில் குடியிருக்கும் அங்காளியே! 
பார்வதியின் மறுஉருவாய் வந்தவளே 
மீனவரின் குலவிளக்கே வாருமம்மா 
வேண்டுகின்ற குறைகளெல்லாம் தீருமம்மா
மீனவரின் குலவிளக்கே வாருமம்மா
வேண்டுகின்ற குறைகளெல்லாம் தீருமம்மா
டிவரும் ஓம்கார வடிவத்திலே 
காட்சிதந்து அமர்ந்திருப்பாய் கோவிலிலே 
டிவரும் ஓம்கார வடிவத்திலே 
காட்சிதந்து அமர்ந்திருப்பாய் கோவிலிலே 
கண்ணான கண்மணியே வந்திடம்மா 
மனம்நிறைய வேண்டுதலை தந்திடம்மா

மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா! 
பூங்கரகம் எடுத்துவந்தோம் ஊர்கோலமாய் 

இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் 
வரும் துன்பம் போக்கிடுவாய் ஈஸ்வரியே 
இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் 
வரும் துன்பம் போக்கிடுவாய் ஈஸ்வரியே 
மழைமேகம் பயிர் தாகம் தீர்ப்பதுபோல்
குடும்பத்தில் இன்பங்கள் தந்திடுவாய்
மழைமேகம் பயிர் தாகம் தீர்ப்பதுபோல்
குடும்பத்தில் இன்பங்கள் தந்திடுவாய்
எப்போதும் நினைக்கின்றேன் மனத்துன்னை
தப்பாமல் நிழலாக துணை இருப்பாய்
எப்போதும் நினைக்கின்றேன் மனத்துன்னை
தப்பாமல் நிழலாக துணை இருப்பாய்
பார்வதியே ஈஸ்வரியே அங்காளம்மா
பாவங்கள் தினம் போக்கி காத்திடம்மா

மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா! 
பூங்கரகம் எடுத்துவந்தோம் ஊர்கோலமாய் 
மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா! 
பூங்கரகம் எடுத்துவந்தோம் ஊர்கோலமாய் 
சிலம்பொலியில் உன்பெருமை பாடுகிறேன் 
நீ இல்லாத இடத்தினையே தேடுகிறேன்
சிலம்பொலியில் உன்பெருமை பாடுகிறேன் 
நீ இல்லாத இடத்தினையே தேடுகிறேன்

மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா! 
பூங்கரகம் எடுத்துவந்தோம் ஊர்கோலமாய் 

male Voice
Jumping song

vocal layers, - குரல் அடுக்குகள்,
Active punch songs
சுறுசுறுப்பான பக்தி பாடல்

drum breaks - டிரம் உடைக்கிறது
Devotional song பக்தி பாடல்