Thursday, February 26, 2026

ஆசைப்பட்டு மனைவி

ஆசைப்பட்டு மனைவி 
அன்போடு கேட்டால் 
உயிரைத் தந்து கூட 
பெற்றுத் தருதல் வேண்டும்

நேசம் கொண்ட குழந்தை 
தவறு செய்த போதும் 
பிள்ளை மனம் நோகா 
நடந்து கொள்ள வேண்டும் 

அன்னை தந்தை செயல்கள் 
துன்பம் தந்த போதும் 
வயது எண்ணி அவர்மேல் 
அன்பு காட்ட வேண்டும். 

உலகம் உனது எண்ணம் 
போல நடப்பதில்லை 
ஆற்று நீரில் பயணம் 
செய்து கரையைச் சேரு