Thursday, February 26, 2026

காக்க வேண்டும் சாமி

காக்க வேண்டும் சாமி என்னைக் 
காக்க வேண்டும் சாமி 
சொந்த பந்தம் யாரும் இல்ல 
காக்க வேண்டும் சாமி 
பார்க்க வேண்டும் சாமி என்னைப் 
பார்க்க வேண்டும் சாமி 
கருணை பார்வை கொண்டு என்னைப் 
பார்க்க வேண்டும் சாமி 

சொந்த பந்தம் எல்லாம் 
உறவை பார்ப்பதில்லை 
பணத்தை நம்பி தானே 
உறவும் தேடி வருது 
பணம் இல்லா மனிதன் 
பழம் இல்லா மரம்தான் 
காய்ந்த குளத்தை நம்பி 
எந்த உயிரும் இல்லை. 

காசு இல்லாத வாழ்க்கை 
காட்டு வழிப் பயணம் 
என்ன நடக்கும் என்று 
யாரும் சொன்னதில்லை 
அன்பு பாசம் எல்லாம் 
காய்ந்த ஆறு தானே 
நீரைக் கொண்டு நிரப்ப 
யாரும் வருதல் இல்லை