Saturday, March 7, 2026

சேருங்க நீங்க சேருங்க

சேருங்க நீங்க சேருங்க - நம்ம
அரசு பள்ளியில் சேருங்க 
பாருங்க நீங்க பாருங்க - உங்க 
பிள்ளை ஜெயிக்கும் பாருங்க 
சேருங்க நீங்க சேருங்க - நம்ம
அரசு பள்ளியில் சேருங்க 
பாருங்க நீங்க பாருங்க - உங்க 
பிள்ளை ஜெயிக்கும் பாருங்க 

எட்டு திசையிலும் அரசு பிள்ளைங்க 
சாதனை படைத்து வருகுது 
சுற்றும் சூரியனும் நம்ம பிள்ளைகளின் 
வெற்றி செய்தியினைப் பரப்புது 
எட்டு திசையிலும் அரசு பிள்ளைங்க 
சாதனை படைத்து வருகுது 
சுற்றும் சூரியனும் நம்ம பிள்ளைகளின் 
வெற்றி செய்தியினைப் பரப்புது 

சேருங்க நீங்க சேருங்க - நம்ம
அரசு பள்ளியில் சேருங்க 
பாருங்க நீங்க பாருங்க - உங்க 
பிள்ளை ஜெயிக்கும் பாருங்க 

உங்க பிள்ளை ஜெயித்திட 
எங்களோடு வாருங்கள்
காசு பணம் தேவையில்லை 
இங்க வந்து சேருங்கள் 

நோட்டு புத்தகமும் கொடுக்கிறோம்
போடும் துணிமணி கொடுக்கிறோம்
பாட்டு கதையும் நடத்துறோம்
காட்சிப்படுத்தியே நடத்துறோம்