Saturday, February 7, 2026

பாடல் - 45 : பயப்பட வேண்டும்



பயப்பட வேணும் நாம 
பயப்பட வேணும் 
பெரியவங்களைப்  பார்த்து
பயப்பட வேணும்
மதித்திட வேணும் நாம 
மதித்திட வேணும் 
மூத்தவர்களின் சொல்லை 
மதித்திட வேணும்

பயப்பட வேணும் நாம 
பயப்பட வேணும் 
பெரியவங்களைப்  பார்த்து
பயப்பட வேணும்
மதித்திட வேணும் நாம 
மதித்திட வேணும் 
மூத்தவர்களின் சொல்லை 
மதித்திட வேணும்

பயம் கொண்டு வாழ்வதினால் 
ஒழுக்கம் வந்து சேரும் 
அன்பு இரக்கம் கூடும்
பாவ செயல் விலகும் 
பயம் கொண்டு வாழ்வதினால் 
ஒழுக்கம் வந்து சேரும் 
அன்பு இரக்கம் கூடும்
பாவ செயல் விலகும் 
மதிப்பு வளர்ந்து பெருகும்
உதவி வந்து சேரும் 
கொடிய வார்த்தை மறையும் 
பணிவு கொண்டு வாழ்வோம்.

பயப்பட வேணும் நாம 
பயப்பட வேணும் 
பெரியவங்களைப்  பார்த்து
பயப்பட வேணும்
மதித்திட வேணும் நாம 
மதித்திட வேணும் 
மூத்தவர்களின் சொல்லை 
மதித்திட வேணும்

பயமில்லா மனிதரிடம் 
மதிக்கும் குணம் இருக்காது 
மதியாத மனிதரிடம் 
ஒழுக்க குணம் இருக்காது
பயமில்லா மனிதரிடம் 
மதிக்கும் குணம் இருக்காது 
மதியாத மனிதரிடம் 
ஒழுக்க குணம் இருக்காது
ஒழுக்கமில்லா மனிதரிடம் 
பொது நலமும் இருக்காது
சுயநலன்கள் மிகுந்துவிட்டால் 
வாழ்வில் இன்பம் இருக்காது

பயப்பட வேணும் நாம 
பயப்பட வேணும் 
பெரியவங்களைப்  பார்த்து
பயப்பட வேணும்
மதித்திட வேணும் நாம 
மதித்திட வேணும் 
மூத்தவர்களின் சொல்லை 
மதித்திட வேணும்

பயப்பட வேணும் நாம 
பயப்பட வேணும் 
பெரியவங்களைப்  பார்த்து
பயப்பட வேணும்
மதித்திட வேணும் நாம 
மதித்திட வேணும் 
மூத்தவர்களின் சொல்லை 
மதித்திட வேணும்











புத்தி மாறி போகும்போது 
திருத்த ஆளு வேணுமுங்க 
சொல்லுகின்ற வழி நடந்தா 
வாழ்க்கை மாறி ஜொலிக்குமுங்க
நெறிபடுத்தும் வாழ்க்கையில 
இன்பம் மிகுந்து இருக்குங்க
இன்பம் தரும் வாழ்க்கைதானே 
நமக்கு இப்ப வேணும்ங்க


அன்னை தந்தை சொல்லை மீறி 
எந்த செயலும் செய்தல் தவறு 
அன்னை தந்தை சொல்லும் சொல்லில் 
பாசம் பரிவு நன்மை உண்டு 
அனுப வத்தை மனதில் வைத்து
நம்மைக் காக்க சொல்லு கின்றார் 
அன்னை தந்தை சொல்ல ஏற்போம் 
வாழ்வில் மதித்து வென்று வாழ்வோம்

அண்ணன் தம்பி அக்காள் தங்கை 
என்ற உறவின் தன்மை அறிந்து 
எண்ணம் எதுவென் றிருந்த போதும்
விட்டுக் கொடுத்து உறவைக் காப்பீர்.
மண்ணும் வானும் நிலவும் மாறும் 
உதிரம் பிறந்த உறவு மாறா 
பணத்தை மதித்து உறவை விட்டால் 
பணமும் போகும் உறவும் போகும்


பயம் இல்லா மனிதரிடம் 
நல்ல குணம் இருக்காது 
குணம் இல்லா மனிதரிடம்
அன்பு இரக்கம் இருக்காது
அன்புமட்டும் இல்லை என்றால் 
மிருகமாக மாறிடுவாய் 
மிருக மனித வாழ்க்கையிலே
துன்பம் வந்து சேர்ந்திடுமே