பெண்ணின் உள்ளம்
கருணை கோவில்
அவளின் சொல்லே
சொர்க்க வாயில்
பெண்ணின் உள்ளம்
கருணை கோவில்
அவளின் சொல்லே
சொர்க்க வாயில்
ஆணின் வலிமை
பெற்று இருப்பாள்
அன்பு வடிவம்
கொண்டு இருப்பாள்
பெண்ணின் உள்ளம்
கருணை கோவில்
அவளின் சொல்லே
சொர்க்க வாயில்
பெண்ணை சுற்றியே
உலகம் இயங்கும்
கருணை இரக்கம்
அவளின் சுரங்கம்
பெண்ணை சுற்றியே
உலகம் இயங்கும்
கருணை இரக்கம்
அவளின் சுரங்கம்
பெண்ணின் அணிகலன்
பெண்மை குணமே
ஊக்கம் அளிப்பது
அவளின் இனமே
பெண்ணின் அணிகலன்
பெண்மை குணமே
ஊக்கம் அளிப்பது
அவளின் இனமே
பெண்ணின் ஒழுக்கம்
நாட்டின் ஒழுக்கம்
பெண்மை மிதிக்க
வாழ்க்கை வழுக்கும்
பெண்ணின் உள்ளம்
கருணை கோவில்
அவளின் சொல்லே
சொர்க்க வாயில்
ஆணுக்கு இணையாய்
மதிக்க வேண்டும்
அவளின் அறிவை
துதிக்க வேண்டும்
ஆணுக்கு இணையாய்
மதிக்க வேண்டும்
அவளின் அறிவை
துதிக்க வேண்டும்
பெண்ணை மதித்தால்
தேவதை வருவாள்
அன்பை அள்ளி
அவளும் தருவாள்
பெண்ணை மதித்தால்
தேவதை வருவாள்
அன்பை அள்ளி
அவளும் தருவாள்
பெண்கள் காத்து
உள்ளம் பூப்போம்
அவளின் சொல்லை
அன்பாய் கேட்போம்


