கொலை கொலை கொலை
நாட்டு மக்கள் கொலை
தலைவர் செய்யும் கொலை
தரம் தாழ்ந்த கொலை
கொலை கொலை கொலை
நாட்டு மக்கள் கொலை
தலைவர் செய்யும் கொலை
தரம் தாழ்ந்த கொலை
போர் என்னும் பேரிலே
நாட்டு மக்கள் அழிப்பது
கொலையில் ஒன்றுதானடா
கொடுமை எங்கு பாரடா
கொலை கொலை கொலை
நாடு செய்யும் கொலை
தலைவர் செய்யும் கொலை
தரம் தாழ்ந்த கொலை
தினம் தினம் சாகிறார்
குற்றம் இன்றி சாகிறார்
நாட்டில் வந்து பிறந்ததாலே
குடும்பத்தோடு சாகிறார்
இரண்டு நாட்டுத் தலைவர்கள்
ஆண வத்தின் பேரிலேயே
இரண்டு நாட்டு மக்களும்
குண்டு பட்டு சாவதா
இரண்டு நாட்டுத் தலைவர்கள்
ஆண வத்தின் பேரிலேயே
இரண்டு நாட்டு மக்களும்
குண்டு பட்டு சாவதா
விலங்குகளைப் போலவே
கொன்று மாய்த்து குவிக்கிறார்
மக்கள் மாண்ட பின்னரே
என்ன செய்யப் போகிறார்.
கொலை கொலை கொலை
நாடு செய்யும் கொலை
தலைவர் செய்யும் கொலை
தரம் தாழ்ந்த கொலை
வேண்டும் அமைதி வேண்டுமே
வேண்டு கின்றேன் கடவுளை
வேண்டும் ஒரு சுதந்திரம்
ஆட்சி செய்வோர் கையினால்
வேண்டும் அமைதி வேண்டுமே
வேண்டு கின்றேன் கடவுளை
வேண்டும் ஒரு சுதந்திரம்
ஆட்சி செய்வோர் கையினால்
மண்ணில் வந்து பிறக்கிறோம்
மனித னாக வாழ்கிறோம்
எங்கள் பிழைப்பு எதுவென
கண்டு செய்து பிழைக்கிறோம்
உதவி கேட்கவில்லையே
அழித்திடாதீர் எங்களைப்
உங்களைப்போல் நாங்களும்
மண்ணில் வாழ வேண்டுமே
கொலை கொலை கொலை
நாட்டு மக்கள் கொலை
தலைவர் செய்யும் கொலை
தரம் தாழ்ந்த கொலை
போர் என்னும் பேரிலே
நாட்டு மக்கள் அழிப்பது
கொலையில் ஒன்றுதானடா
கொடுமை எங்கு பாரடா
கொலை கொலை கொலை
நாடு செய்யும் கொலை
தலைவர் செய்யும் கொலை
தரம் தாழ்ந்த கொலை