Wednesday, April 15, 2026

பாடல் - 54 : பார்த்த உடனே காதல் கொண்டு

பார்த்த உடனே காதல் கொண்டு
துணையைத் தேடும் மனிதா
பழகப் பழக எல்லாம் புரியும்
பழகிப் பாரு மனிதா
தூர இருக்கும் நெறிஞ்சிப் பூவும்
கண்ணுக் கழகாய் இருக்கும்
ரோஜா கூட முள்ளை வைத்து
உள்ளம் கட்டி இழுக்கும்

பார்த்த உடனே காதல் கொண்டு
துணையைத் தேடும் மனிதா
பழகப் பழக எல்லாம் புரியும்
பழகிப் பாரு மனிதா

தேனை சுரந்து பருவப் பூக்கள்
அழகு காட்டி அழைக்கும்
மலரின் அழகில் மயங்கும் வண்டோ
தேனை உண்ணப் பழகும்
பழகும் போது தெரிவ தில்லை
பூவின் உண்மை மணமே
சொந்தம் கொண்டு வாழும் போது
தெரியும் அதனின் குணமே
எல்லாப் பூவும் இதுபோல் இல்லை
அறிந்து பழக வேண்டும்
மோகம் கொண்டு பழக வேண்டாம்
அமைதி காத்தல் வேண்டும்.

பார்த்த உடனே காதல் கொண்டு
துணையைத் தேடும் மனிதா
பழகப் பழக எல்லாம் புரியும்
பழகிப் பாரு மனிதா

கவர்ச்சி இன்றி பூக்கும் பூக்கள்
வாசம் வைத்து இருக்கும்
பூக்கள் கண்டு அள்ளி அணைக்க
உள்ளம் இனிமை பயக்கும்
கொடியின் மலரோ செடியின் மலரோ
வகைமை காண வேண்டாம்
உனக்குப் புடித்த பூவைக் கண்டு
உள்ளம் சேர்க்க வேண்டும்
ஒன்றுக் கொன்று விட்டுக் கொடுத்து
குடும்பம் நடத்த வேண்டும்
உறவுக் கண்டு உரிமை கொண்டு
இல்லம் தழைக்க வேண்டும்.

பார்த்த உடனே காதல் கொண்டு
துணையைத் தேடும் மனிதா
பழகப் பழக எல்லாம் புரியும்
பழகிப் பாரு மனிதா
தூர இருக்கும் நெறிஞ்சிப் பூவும்
கண்ணுக் கழகாய் இருக்கும்
ரோஜா கூட முள்ளை வைத்து
உள்ளம் கட்டி இழுக்கும்

பார்த்த உடனே காதல் கொண்டு
துணையைத் தேடும் மனிதா
பழகப் பழக எல்லாம் புரியும்
பழகிப் பாரு மனிதா