கண்மணியே! கவிமணியே!
கள்ளூறும் பூச்சரமே!
மின்மினியே முழுநிலவே!
மனம்நிறைந்த தேன்சுவையே
கண்மணியே! கவிமணியே!
கள்ளூறும் பூச்சரமே!
மின்மினியே முழுநிலவே!
மனம்நிறைந்த தேன்சுவையே
தாளங்கள் இசையோடு
என்மனதும் ஆடுதடி
கண்ணுறங்கும் நேரத்திலும்
உன்அழகை தேடுதடி
கண்மணியே! கவிமணியே!
காற்றோடு போகின்ற
கள்ளூறும் பூச்சரமே!
மின்மினியே முழுநிலவே
மனம்நிறைந்த தேன்சுவையே!
காற்றோடு போகின்ற
கருமேகம் போல்உந்தன்
பின்னாலே போகுதடி
கேளாமல் என்மனசு
ஊற்றோடு வருகின்ற
சிறுமணல்போல் புன்னகையும்
புதுப்பார்வை கண்ணசைவும்
சொன்னதடி உன்மனசு
காற்றுவர தலையாட்டும்
மரம்போல என்அன்பில்
நீ உருகி உளம்சேர
பாடுகிறேன் புதுதெம்பில்
கண்மணியே! கவிமணியே!
பாதங்கள் நோகுமென்று
கள்ளூறும் பூச்சரமே!
மின்மினியே முழுநிலவே!
மனம்நிறைந்த தேன்சுவையே
பாதங்கள் நோகுமென்று
பூப்பாதை அமைத்துவைத்தேன்
முழுநிலவும் சுடுமென்று
என்மனதை திறந்துவைத்தேன்
பூவிரியும் சிரிப்பழகி
பொன்மாலை நிலவழகி
செம்மைநிலம் விளைந்திட்ட
முற்றியநெல் கதிரழகி
அடியெடுத்து தென்றலைப்போல்
என்மனதுள் வருவாயோ?
மனமெல்லாம் மகிழ்ந்திடவே
புதுசுகங்கள் தருவாயோ?
கண்மணியே! கவிமணியே!
கள்ளூறும் பூச்சரமே!
மின்மினியே முழுநிலவே!
மனம்நிறைந்த தேன்சுவையே
கண்மணியே! கவிமணியே!
கள்ளூறும் பூச்சரமே!
மின்மினியே முழுநிலவே!
மனம்நிறைந்த தேன்சுவையே
தாளங்கள் இசையோடு
என்மனதும் ஆடுதடி
கண்ணுறங்கும் நேரத்திலும்
உன்அழகை தேடுதடி
கண்மணியே! கவிமணியே!
கள்ளூறும் பூச்சரமே!
மின்மினியே முழுநிலவே
மனம்நிறைந்த தேன்சுவையே