ஐந்தறிவு ஜீவனடா
பார்ப்பதனால் தெரிவதில்லை
செயல்களினால் புரியுமடா
ஆறறிவு மனிதனடா
ஐந்தறிவு ஜீவனடா
பார்ப்பதனால் தெரிவதில்லை
செயல்களினால் புரியுமடா
ஓரறிவு தொடுதலடா
ஈரறிவு சுவைத்தலடா
மூன்றறிவு நுகர்தலடா
நான்கறிவு பார்த்தலடா
ஐயறிவு காணலடா
ஆறறிவு மனம்பெரடா
அறிவென்பது திறத்திலடா
பிறப்பதனால் இல்லையடா
புல்லும் மரமும்
புழுவும் எறும்பும்
தும்பி வண்டு
பறவை விலங்கும்
புழுவும் எறும்பும்
தும்பி வண்டு
பறவை விலங்கும்
பூமியில் பிறந்து
இனிதுடன் வாழும்
பூமியை கெடுதல்
செய்வது இல்லை.
வானம் அளந்தான்
கோளும் அளந்தான்
நீலக் கடலை ஆள முனைந்தான்
கோள்கள் கண்டான்
இயக்கமும் கண்டான்
நிலவில் வீடு
கட்டவும் துணிந்தான்
மலையும் காடும்
சமவெளி கடலும்
பாலை நிலமும்
பணிந்திட செய்தான்.
அறிவு திறத்தால்
ஆளுகை செய்தான்
அறிவைப் பெற்ற
மனித இனமே!
அறிவால் புவியை
அழிக்குது தினமே!
தொடுதல் உணர்வே
ஈரறி வென்பது
சுவைத்தல் அறிவே
ஈரறி வென்பது
சுவைத்தல் அறிவே
மூவறி வென்பது
நுகர்தல் பலனே
நாலறி வென்பது
காணல் திறனே
ஐயறி வென்பது
கேட்டல் வகையே
ஆறறி வென்பது
சிந்தனைத் திறனே
புல்லும் மரமும்
புழுவும் எறும்பும்
தும்பி வண்டு
பறவை விலங்கும்
புழுவும் எறும்பும்
தும்பி வண்டு
பறவை விலங்கும்
பூமியில் பிறந்து
இனிதுடன் வாழும்
பூமியை கெடுதல்
செய்வது இல்லை.
மனிதன் பெற்றான்
சிந்தனை அறிவு
அதனால் தானே
பூமியை பிளவு
எல்லா உயிரும்
பூமியில் பிறந்து
இனிதாய் வாழ்ந்து
வாழ்வினைத் துறக்கும்.
அறிவைப் பெற்று
கொண்டதை எல்லாம்
காத்திட மறந்தார்