Sunday, November 22, 2026

வியாபாரம் வியாபாரம்

வியாபாரம் வியாபாரம்
நல்லதொரு வியாபாரம்
போட்டுவைத்த முதலைவிட
பன்மடங்கு வியாபாரம்

சிந்தனையை கிளறிவிட்டு
குளிர்காயும் வியாபாரம்
சோறுதண்ணி இல்லாம
படிக்கவைக்க வியாபாரம்

வகுப்பறை கட்டிடங்கள்
அதிகாரம் பண்ணுதடா
மாணவரின் உள்மனசு
நொந்துநொந்து சாகுதடா

மதிப்பெண்ணை மையமாக்கி
மாணவரை தாக்குதடா
இயலாத பிள்ளைகளை
வேறுபள்ளி மாற்றுதடா

எங்களோட பள்ளியிலே
சேர்த்துவிட்டா உங்கபிள்ளை
சாதனைகள் செய்யுமென்பார்
வாழ்க்கைஒளி வீசுமென்பார்.

மகுடிக்கு மூழ்கியவர்
சேர்த்துவிட்டு வந்துவிடுவார்
பாடுபட்ட அத்தனையும்
படிப்புக்காக செலவுசெய்வார்