Friday, November 20, 2026

பாடல் - 74 : தீபமேற்று தீபமேற்று

தீபம் ஏற்று தீபம் ஏற்று
வீடு எங்கும் தீபம் ஏற்று
துன்பம் எல்லாம் போக வேண்டும்
துரத்தி அடிக்க தீபம் ஏற்று
அன்பு பாசம் நிறைய வேண்டும்
அகல்விளக்கு தீபம் ஏற்று
இன்பம் வந்து சேர வேண்டும்
இனிமை யாக தீபம் ஏற்று
வானில் உள்ள தாரகைகள்
பூமி வந்து கண்சிமிட்டும்
பறந்து செல்லும் மின்மினிகள்
தரையில் வந்து மினுமினுக்கும்

தீபம் ஏற்று தீபம் ஏற்று
வீடு எங்கும் தீபம் ஏற்று
துன்பம் எல்லாம் போக வேண்டும்
துரத்தி அடிக்க தீபம் ஏற்று

விளக்கில் உள்ள நெய்யைப் போல
உருகி துன்பம் கரைய வேண்டும்
இருளை விரட்டும் ஒளியைப் போல
வாழ்க்கை ஒளி வீச வேண்டும்
விளக்கில் உள்ள நெய்யைப் போல
உருகி துன்பம் கரைய வேண்டும்
இருளை விரட்டும் ஒளியைப் போல
வாழ்க்கை ஒளி வீச வேண்டும்
கூடி மகிழும் உறவுகளால்
இல்லம் இன்பம் பெருக வேண்டும்
பாடித் திரியும் பறவை போல
உள்ளம் மகிழ்ந்து இருக்க வேண்டும்

தீபம் ஏற்று தீபம் ஏற்று
வீடு எங்கும் தீபம் ஏற்று
துன்பம் எல்லாம் போக வேண்டும்
துரத்தி அடிக்க தீபம் ஏற்று

தீய எண்ணம் விலக வேண்டும் 
சொக்கப் பானை கொளுத்தி ஏற்று
அருணை ஈசன் பெருமை சொல்லி 
மலையின் மீது தீபம் ஏற்று 
தீய எண்ணம் விலக வேண்டும் 
சொக்கப் பானை கொளுத்தி ஏற்று
அருணை ஈசன் பெருமை சொல்லி 
மலையின் மீது தீபம் ஏற்று 
ஆறுமுகனை வளர்த்தெடுத்த 
அன்பு பெண்கள் நினைத்து ஏற்று
சின்ன பிள்ளை சிரிப்பு போல 
சிரித்துக் கொண்டு விளக்கு ஏற்று
குத்து விளக்கு கும்ப விளக்கு
தீப விளக்கு தூப விளக்கு
வரிசை விளக்கு தொங்கல் விளக்கு
அத்தனையும் கலந்து ஏற்று

தீபம் ஏற்று தீபம் ஏற்று
வீடு எங்கும் தீபம் ஏற்று
துன்பம் எல்லாம் போக வேண்டும்
துரத்தி அடிக்க தீபம் ஏற்று
அன்பு பாசம் நிறைய வேண்டும்
அகல்விளக்கு தீபம் ஏற்று
இன்பம் வந்து சேர வேண்டும்
இனிமை யாக தீபம் ஏற்று
வானில் உள்ள தாரகைகள்
பூமி வந்து கண்சிமிட்டும்
பறந்து செல்லும் மின்மினிகள்
தரையில் வந்து மினுமினுக்கும்

தீபம் ஏற்று தீபம் ஏற்று
வீடு எங்கும் தீபம் ஏற்று
துன்பம் எல்லாம் போக வேண்டும்
துரத்தி அடிக்க தீபம் ஏற்று