Tuesday, November 24, 2026

மலைமீது இருப்பவனே வெற்றிதரும் வேலா!

மலைமீது இருப்பவனே வெற்றிதரும் வேலா! 
மயில்மீது அமர்ந்திருந்து காட்சிதரும் பாலா! 
ஆறுபடை வீடுகளில் ஆளுகைகள் கொண்டாய்
ஆனைமுகன் துணைவேண்டி கிழவனாகி நின்றாய்!

மயிலேறி விளையாடி வந்த ஒருமுகமே!
உபதேசம் செய்துகுரு ஆன ஒருமுகமே! 
அடியாகள் தீவினைகள் தீர்க்க ஒருமுகமே 
அன்னையிடம் வேல்வாங்கி நின்ற ஒருமுகமே 
அதர்மத்தை அழித்துதேவர் காத்த ஒருமுகமே 
வள்ளிமனம் கவர்ந்திடவே சென்ற ஒருமுகமே 
ஆறுமுகன் உனைகாண வெற்றி வந்துசேரும் 
அலைபாயும் மனம்கூட உன்னருளை தேடும்

நம்பிவரும் அன்பர்கள் காக்கும்கை ம்