ரெட்டணையில் கோவில் கொண்டவளே
வேப்பிலையில் வாழும் மாரியம்மா
வேற்றுருவாய் வந்த காளியம்மா
அங்காளியே எங்கள் அங்காளியே
ரெட்டணையில் கோவில் கொண்டவளே
வேப்பிலையில் வாழும் மாரியம்மா
வேற்றுருவாய் வந்த காளியம்மா
கலைமகள் சாபத்தால் வந்தவளே
வயதான தோற்றத்தைக் கொண்டவளே
கொக்கு இறகினை சூடிக்கொண்டு
காட்டிலும் மேட்டிலும் வாழ்பவளே
அங்காளியே எங்கள் அங்காளியே
ரெட்டணையில் கோவில் கொண்டவளே
வேப்பிலையில் வாழும் மாரியம்மா
வேற்றுருவாய் வந்த காளியம்மா
எலுமிச்ச மாலையால் அலங்கரித்து
பொங்கலும் பூசையும் வைத்திடுவோம்
பூ மகளே உள்ளம் குளிர்ந்திடம்மா.
அமாவாசையில் ஊஞ்சலாட்டி
எலுமிச்ச மாலையால் அலங்கரித்து
பொங்கலும் பூசையும் வைத்திடுவோம்
பூ மகளே உள்ளம் குளிர்ந்திடம்மா.
எங்களின் வேண்டுதல் முன்னே வைத்து
இல்லமும் உள்ளமும் தூய்மை செய்து
குடும்பத்தோடு வழிபடுவோம்
வேண்டும் வரங்கள் தந்திடம்மா
அங்காளியே எங்கள் அங்காளியே
ரெட்டணையில் கோவில் கொண்டவளே
வேப்பிலையில் வாழும் மாரியம்மா
வேற்றுருவாய் வந்த காளியம்மா
மாசியில் விழா கொண்டவளே
மக்களைத் தேடி வந்தவளே
மயானத்தில் உக்கிரமாய்
அசுர வதம் செய்தவளே
மாசியில் விழா கொண்டவளே
மக்களைத் தேடி வந்தவளே
மயானத்தில் உக்கிரமாய்
அசுர வதம் செய்தவளே
தீவினை வந்து சேராமல்
எங்கள் குறைகள் போக்கிடமா
குடும்பம் தழைக்கச் செய்திடம்மா
அங்காளியே எங்கள் அங்காளியே
ரெட்டணையில் கோவில் கொண்டவளே
வேப்பிலையில் வாழும் மாரியம்மா
வேற்றுருவாய் வந்த காளியம்மா
கலைமகள் சாபத்தால் வந்தவளே
வயதான தோற்றத்தைக் கொண்டவளே
கொக்கு இறகினை சூடிக்கொண்டு
காட்டிலும் மேட்டிலும் வாழ்பவளே
அங்காளியே எங்கள் அங்காளியே
ரெட்டணையில் கோவில் கொண்டவளே
வேப்பிலையில் வாழும் மாரியம்மா
வேற்றுருவாய் வந்த காளியம்மா