Thursday, January 22, 2026

பாடல் - 38 : அத்தை மகனே அத்தை மகனே



அத்தை மகனே அத்தை மகனே
எனது உள்ளம் கவர்ந்தவரே
எத்தனை உறவு இருந்த போதிலும் 
என்னை நெஞ்சில் வைத்தவரே

அத்தை மகனே அத்தை மகனே
எனது உள்ளம் கவர்ந்தவரே

பெத்த பிள்ளைபோல எனக்கு வேண்டிய
அத்தனையும் செய்து தந்தவரே
சித்தம் கலங்கிய நேரத்திலே பக்கம் 
ஆறுதலாய் துணை நின்றவரே
வீச்சருவா கொண்டு காவல் காத்திடும் 
அய்யனாரின் பெயர் கொண்டவரே
எதற்கும் துணிந்து நின்றவரே கையில்
வெற்றிக் கனியை தந்தவரே

அத்தை மகனே அத்தை மகனே
எனது உள்ளம் கவர்ந்தவரே

எந்தன் செயலில் உள்ளம் மகிழ்ந்து
ஊக்கம் அள்ளித் தந்தவரே
விண்ணை தொடும் சாதனை செய்ய
உள்ளம் மகிழ்ந்து இருந்தவரே
வேண்டிய பொழுது வேண்டியதை தந்து
கடவுள் போல காப்பவரே
நாளும் வந்திடும் சூரியனைப் போல
தினமும் கண்டு ரசிப்பவரே

அத்தை மகனே அத்தை மகனே
எனது உள்ளம் கவர்ந்தவரே










வீச்சருவாள் கையில் வைத்து
ஊரைக் காக்கும் தெய்வம் போல
என்மேல் உந்தன் பாசம் வைத்து
என்னைக் காத்து வருகின்றாய்
விண்ணைத்தாண்டி சாதனை செய்ய
ஊக்கம் தந்து மகிழ்கின்றாய்
முந்தை ஜென்ம வினை பயனோ
இன்று உன்னை அடைவதற்கு



















அத்தை மகனே அத்தை மகனே
என் உள்ளம் கவர்ந்த அத்தை மகனே

பெத்த பிள்ளைபோல எனக்கு வேண்டிய 
அத்தனையும் செய்து தந்தவரே 
சித்தம் கலங்கிய நேரத்திலே பக்கம்
ஆறுதலாய் துணை நின்றவரே
வீரனின் பெயரை தன் பெயராய் கொண்டு 
பேருக்கு ஏற்றார்கள் வாழ்ந்தவரே 
தனித்த கோடியாய் இருந்த எனக்கு 
கொம்புபோல நின்று காத்தவரே

அத்தை மகனே அத்தை மகனே
என் உள்ளம் கவர்ந்த அத்தை மகனே

வீச்சருவாள் கையில் வைத்து 
ஊரைக் காக்கும் தெய்வம் போல 
என்மேல் உந்தன் பாசம் வைத்து 
என்னைக் காத்து வருகின்றாய் 
விண்ணைத்தாண்டி சாதனை செய்ய 
ஊக்கம் தந்து மகிழ்கின்றாய் 
முந்தை ஜென்ம வினை பயனோ 
இன்று உன்னை அடைவதற்கு

அத்தை மகனே அத்தை மகனே
என் உள்ளம் கவர்ந்த அத்தை மகனே