Sunday, January 25, 2026

சங்கு சக்கரம் கையில்

சங்கு சக்கரம் 
கையில் ஏந்தியே 
நின்று காத்திடும் 
அன்பு தாயடி 
உந்தன் அழகினை 
கண்டு மயங்கியே 
உள்ளம் உருகிடும் 
உந்தன் சேயடி

தேடிவரும் பக்தருக்கு 
திருமுகத்தைக் காட்டிடுவாய்
தீராத அவருடைய 
துன்பங்களை வாட்டிடுவாய் 
தேடிவரும் பக்தருக்கு 
திருமுகத்தைக் காட்டிடுவாய்
தீராத அவருடைய 
துன்பங்களை வாட்டிடுவாய் 
அள்ளி அள்ளி தந்திடுவாய் 
உந்தன் அருட்செல்வம் 
பக்தர்களின் உள்மனதில் 
உன்நினைவும் பொங்கும்

சங்கு சக்கரம் 
கையில் ஏந்தியே 
நின்று காத்திடும் 
அன்பு தாயடி 

வடக்கால பாத்திருந்து 
ஆட்சிசெய்யும் அம்மா
ஏடெடுத்து பாடுகிறேன் 
மற்றதெல்லாம் சும்மா
வடக்கால பாத்திருந்து 
ஆட்சிசெய்யும் அம்மா
ஏடெடுத்து பாடுகிறேன் 
மற்றதெல்லாம் சும்மா
உன்புகழைச் சொல்லி 
பாடுகிறேன் துள்ளி
எந்தமனம் ஆடும் 
உன்நினைவைத் தேடும்

சங்கு சக்கரம் 
கையில் ஏந்தியே 
நின்று காத்திடும் 
அன்பு தாயடி 
உந்தன் அழகினை 
கண்டு மயங்கியே 
உள்ளம் உருகிடும் 
உந்தன் சேயடி

சங்கு சக்கரம் 
கையில் ஏந்தியே 
நின்று காத்திடும் 
அன்பு தாயடி 



சங்கு சக்கரம் கையில் 
வைத்து இருப்பாயே நீயே 
பொங்கும் புன்னகை தந்து 
உள்ளம் கவர்ந்திடுவாயே
எல்லாம் உன் செயலாலே 
எங்கும் நிகழ்ந்திட கண்டேன் 
பொள்ளாப் பிள்ளையும் உந்தன் 
பாதம் பணிந்திட கண்டேன்

சங்கு சக்கரம் கையில் 
வைத்து இருப்பாயே நீயே 
  
அழகாக கொலுவிருந்து 
அருள்வழங்கும் தாயே 
அன்னையினை தேடிவந்த 
நானும் உந்தன் சேயே 
மலராக பூத்திருந்து 
காட்சிதரும் அன்னை 
மனதிற்குள் கோவில்கட்டி 
வைத்திருப்பேன் உன்னை

சங்கு சக்கரம் கையில் 
வைத்து இருப்பாயே நீயே 



சங்கு சக்கரம் கையில் 
வைத்து இருப்பாயே நீயே 



சங்கு சக்கரம் கையில் 
வைத்து இருப்பாயே நீயே 






சங்கு சக்கரம் கையில் ஏந்திடும் சப்த கன்னியும் நீயடி

அம்மனே வெண்ணி அம்மனே
எட்டுதிசை ஆட்சிசெய்யும் அம்மனே வெண்ணி அம்மனே 
பூவுக்குள் ஒளிந்திருக்கும் அம்மனே வெண்ணி அம்மனே 
வெற்றிமாலை சூட்டிடுவாய் அம்மனேவெண்ணி அம்மனே 

ஊரெல்லாம் உன்பெருமை பேசுதம்மா 
உன்னருளே பூமிஎங்கும் வீசுதம்மா 
கண்ணாலே பார்த்தவங்க எல்லோரும் 
சொன்னதினால் கூட்டமிங்கும் கூடுதம்மா 

சங்கு சக்கரம் கையில் ஏந்தியே வைஷ்ணவையே 
பொங்கும் புன்னகை அருள் மழையாகத் தருபவளே
எங்கும் எதிலும் எப்பொழுதும் நீ இருப்பாயே 
திங்கள் சூரியன் தாரகை எல்லாம் உன்வடிவே

செவ்வாய் வெள்ளி அருள் தர பக்தரை அழைத்து விடுவாய்
பொங்கும் புன்னகை முகத்தைக் கொண்டவள் சிங்கம் ஏறியே ஊரைக் காப்பவள்

https://app.dupdub.com/login?status=signUp&invitation_code=miyOfw3X