Monday, January 26, 2026

பாடல் - 36 : ஆசை மனைவி கையிலே



ஆசை மனைவி கையிலே 
சோறு உண்டு பாரடா 
சொர்க்கம் என்பது மண்ணிலே 
வேறு எங்கும் இல்லையே 
ஆசை மனைவி கையிலே 
சோறு உண்டு பாரடா 
சொர்க்கம் என்பது மண்ணிலே 
வேறு எங்கும் இல்லையே 
மண்ணில் வந்த போதிலே
உனக்காய் பிறந்து வளர்ந்தவள்
நேரம் காலம் கூடிட
நிழலாய் வந்து சேர்ந்தவள்

ஆசை மனைவி கையிலே 
சோறு உண்டு பாரடா 
சொர்க்கம் என்பது மண்ணிலே 
வேறு எங்கும் இல்லையே 

வீசும் காற்றின் தூசினை 
தட்டி சுவாசம் தருவள்
பாசம் கொண்டு உறவினை
கட்டி மாலை செய்பவள்
வீசும் காற்றின் தூசினை 
தட்டி சுவாசம் தருவள்
பாசம் கொண்டு உறவினை
கட்டி மாலை செய்பவள்
நேசம் கொண்டு வாழ்வினை
உச்சம் காண வைப்பவள்
வாசம் வீசும் பூவென
புகழைப் பரப்பி வாழ்பவள்

ஆசை மனைவி கையிலே 
சோறு உண்டு பாரடா 
சொர்க்கம் என்பது மண்ணிலே 
வேறு எங்கும் இல்லையே 

உன்னை நம்பி வந்தவள்
உள்ளம் உருகி நின்றவள்
உன்னை நெஞ்சில் தாங்கியே
பிள்ளைச் செல்வம் தந்தவள்
உன்னை நம்பி வந்தவள்
உள்ளம் உருகி நின்றவள்
உன்னை நெஞ்சில் தாங்கியே
பிள்ளைச் செல்வம் தந்தவள்
உனது ஆசை எதுவென
அறிந்து அதையே செய்பவள்
உள்ளம் நோகும் பொழுதிலே
உயிரைத் தந்துக் காப்பவள்

ஆசை மனைவி கையிலே 
சோறு உண்டு பாரடா 
சொர்க்கம் என்பது மண்ணிலே 
வேறு எங்கும் இல்லையே 
மண்ணில் வந்த போதிலே
உனக்காய் பிறந்து வளர்ந்தவள்
நேரம் காலம் கூடிட
நிழலாய் வந்து சேர்ந்தவள்

ஆசை மனைவி கையிலே 
சோறு உண்டு பாரடா 
சொர்க்கம் என்பது மண்ணிலே 
வேறு எங்கும் இல்லையே