வீரத்தை நெஞ்சில் வைத்து
ஊரை எல்லாம் காவல் காக்கும்
அய்யனாரே! அய்யனாரே!
வீச்சருவா கையில் வைத்து
வீரத்தை நெஞ்சில் வைத்து
ஊரை எல்லாம் காவல் காக்கும்
அய்யனாரே! அய்யனாரே!
காண வந்த கூட்டம் எல்லாம்
உன்னை கண்டு சொக்குதய்யா
கண்டு கண்டு மெய்மறந்து
பொம்மைபோல நிக்குதய்யா
திக்கெட்டு உள்ளசனம்
வீச்சருவா கையில் வைத்து
வீரத்தை நெஞ்சில் வைத்து
ஊரை எல்லாம் காவல் காக்கும்
அய்யனாரே! அய்யனாரே!
ஏத்தி வச்ச நெய்விளக்கு
உன் உருவம் காட்டுதய்யா
பொங்கல் வைத்து பூச வைத்து
உன் பெருமை பேசுதய்யா
ஏத்தி வச்ச நெய்விளக்கு
உன் உருவம் காட்டுதய்யா
பொங்கல் வைத்து பூச வைத்து
உன்பெருமை பேசுதய்யா
இங்க வந்து கூடுதய்யா
கோவில் சுத்தும் கூட்டம் எல்லாம்
காக்க சொல்லி வேண்டுதய்யா
வீச்சருவா கையில் வைத்து
வீரத்தை நெஞ்சில் வைத்து
ஊரை எல்லாம் காவல் காக்கும்
அய்யனாரே! அய்யனாரே!
ஊரையெல்லாம் கூட்டிக்கிட்டு
பொங்க பானை தூக்கிக்கிட்டு
கோவிலிலே பொங்க வைத்து
உங்களுக்குத் தந்திடுவோம்
ஊரையெல்லாம் கூட்டிக்கிட்டு
பொங்க பானை தூக்கிக்கிட்டு
கோவிலிலே பொங்க வைத்து
உங்களுக்குத் தந்திடுவோம்
எல்லையிலே நின்றவரே
எங்கள் குலம் காப்பவரே
எட்டு திசை பேரைச்சொல்ல
ஓரிடத்தில் நின்றவரே!
வீச்சருவா கையில் வைத்து
வீரத்தை நெஞ்சில் வைத்து
ஊரை எல்லாம் காவல் காக்கும்
அய்யனாரே! அய்யனாரே!
காண வந்த கூட்டம் எல்லாம்
உன்னை கண்டு சொக்குதய்யா
கண்டு கண்டு மெய் மறந்து
பொம்மைபோல நிக்குதய்யா
வீச்சருவா கையில் வைத்து
வீரத்தை நெஞ்சில் வைத்து
ஊரை எல்லாம் காவல் காக்கும்
அய்யனாரே! அய்யனாரே!