Friday, January 30, 2026

ஏத்தம் போட்டு நீர் எறச்சி

பாட்டாளி மக்கள் நாங்க 
பாடுபடும் கூட்டமுங்க. 
ஏடெடுத்து படிச்சதில்ல 
ஏமாத்த நினைச்சதில்ல

காட்டுலையும் மேட்டுலையும் 
உழைச்சு உழைச்சு ஓடாபோனோம் 
வானம் நம்பி பயிர நம்பி
வறுமையிலே தானே நின்னோ

ஏத்தம் போட்டு நீர் எறச்சி
நெல்லு பசி போக்கிடும்
ஊத்து மணல் நாத்தெடுத்து
பயிரு பச்சை செஞ்சிடுவோம்
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
உரமாக தந்திடுவோம்
கண்ணபோல காத்திருந்து
களத்துமேடு சேர்த்திடுவோம்


மாடுகட்டி ஏறு ஒட்டி 
சேறுவயல் நாத்து நட்டு 
களைபறிச்சி பார்த்து நிற்போம் 
நெல்விளைய காத்து நிற்போம்