Friday, January 30, 2026

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே 
உலகத் தத்துவம் சொல்லுங்க 
வாழும்போது தடைகளெல்லாம் 
வந்து வந்து நிக்கிதுங்க 
கடவுள் மீது நம்பிக்கை 
வைக்க சமயம் சொல்லுங்க 
நம்பிக்கை வைத்து காத்திருந்தால்
கையை கட்டி நிக்குதுங்க

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே 
உலகத் தத்துவம் சொல்லுங்க 
வாழும்போது தடைகள் எல்லாம் 
வந்து வந்து நிக்கிதுங்க

வாழ்க்கை வாழ்வதற்கு 
நம்பிக்கை ஒரு பலமே! 
நம்பிக்கை இல்லை என்றால் 
வாழ்தல் ஒருசுமையே! 
நம்பிக்கை ஜெயிப்பதற்கு 
கடவுளும் ஒருதுணையே! 
கடவுளர் கைவிட்டால் 
முயற்சிகள் தோற்றிடுமே!

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே 
உலகத் தத்துவம் சொல்லுங்க 
வாழும்போது தடைகள் எல்லாம் 
வந்து வந்து நிக்கிதுங்க

பற்றிடும் கொடிகளுக்கு 
பற்றுக் கொம்பே கடவுள் 
கடவுள் விலகி நின்றால் 
கொடியின் நிலைதான் என்ன? 
நம்பிக்கை யோடு முயன்று 
கடினப்பட்டு உழைத்தும் 
தோல்விகள் வந்தது என்றால் 
நம்பிக்கை பயன்தான் என்ன?

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே 
உலகத் தத்துவம் சொல்லுங்க 
வாழும்போது தடைகள் எல்லாம் 
வந்து வந்து நிக்கிதுங்க 
கடவுள் மீது நம்பிக்கை 
வைக்க சமயம் சொல்லுங்க 
நம்பிக்கை வைத்து காத்திருந்தால்
கையை கட்டி நிக்குதுங்க

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே 
உலகத் தத்துவம் சொல்லுங்க 
வாழும்போது தடைகள் எல்லாம் 
வந்து வந்து நிக்கிதுங்க


ஜெயித்திட வேண்டும் ஜெய்த்திட வேண்டும் வாழ்வில் என்றும் ஜெயித்திட வேண்டும் வெற்றி கொடியை நாட்ட முயன்று உழைத்திட வேண்டும்