கண்ணில் மையை வைத்து
அழகுக் காட்டும் பெண்ணே!
கையில் மையை வைத்து
புரட்சி செய்வாய் கண்ணே!
கண்ணில் மையை வைத்து
அழகுக் காட்டும் பெண்ணே!
கையில் மையை வைத்து
புரட்சி செய்வாய் கண்ணே!
யாரு ஆள வேண்டும்
சொல்லும் உந்தன் விரல்மை
தெளிந்த சிந்தை வேண்டும்
அதுவே உந்தன் திறமை
கண்ணில் மையை வைத்து
அழகுக் காட்டும் பெண்ணே!
கையில் மையை வைத்து
புரட்சி செய்வாய் கண்ணே!
பணத்தைப் பார்க்க வேண்டாம்
இனத்தைப் பார்க்க வேண்டாம்
சொந்தம் பந்தம் என்று
எதுவும் பார்க்க வேண்டாம்
மற்ற வர்கள் சொல்லை
நீயும் கேட்க வேண்டாம்
உனக்குள் உண்மை தேடு!
கண்டு ஓட்டு போடு!
ஊரும் சிறக்க வேண்டும்
நாடும் வளர வேண்டும்
கண்ணில் மையை வைத்து
அழகுக் காட்டும் பெண்ணே!
கையில் மையை வைத்து
புரட்சி செய்வாய் கண்ணே!
உண்மை யான தேசம்
வறுமை இல்லா தேசம்
கலவை கொண்ட தேசம்
கருணை உள்ள தேசம்
சிந்தை ஒன்று கொண்ட
மக்கள் வாழும் தேசம்
மக்கள் மீது அன்பு
கொண்ட தலைவன் வேண்டும்
சுயநலங்கள் இல்லா
நல்ல தலைவன் வேண்டும்
கண்ணில் மையை வைத்து
அழகுக் காட்டும் பெண்ணே!
கையில் மையை வைத்து
புரட்சி செய்வாய் கண்ணே!
யாரு ஆள வேண்டும்
சொல்லும் உந்தன் விரல்மை
தெளிந்த சிந்தை வேண்டும்
அதுவே உந்தன் திறமை
கண்ணில் மையை வைத்து
அழகுக் காட்டும் பெண்ணே!
கையில் மையை வைத்து
புரட்சி செய்வாய் கண்ணே!



உண்மை சொல்லும் பாரு
குணத்தைப் பார்த்து போடு
பிறப்பு காண வேண்டாம்
நல்ல மனிதர் கண்டு
நீயும் ஓட்டு போடு
மையைப் பூசும் பெண்ணே
அழகு காட்டும் கண்ணே
மையால் மாற்றம் வருமே
சொல்லப் பேறேன் கேறு
மாற்றம் ஒன்று தானே
புத்தம் புதுமை செய்யும்
விரலில் மையை வைத்து
புதுமை காண வேணும்
மையே அழகு - கரு
மையே அழகு
கண்கள் பூசும் மையாலே
பெண்ணே அழகு
மாற்றம் அழகு புது
மாற்றம் அழகு
விரலில் பூசும் மையாலே
மாற்றம் அழகு
ஓட்டு போடும் பெண்ணே!
மாற்றம் வேணும் பெண்ணே!
புத்தம் புது சிந்தனைகள்
பிறக்க வேண்டும் கண்ணே!
நேற்று செயலை பாரு
மாற்றம் என்ன கூறு
வெற்றி பெற்று வந்த பின்னே
ஒளியும் பிறக்கும் ஜோரு