அரசியல் தலைவர்கள்
கவனம் கொள்ளுங்கள்
ஆட்சி சிறப்பாய்
இல்லை என்றால்
தூக்கி எறிவீர்கள்
சுயநல திட்டம்
என்றும் வேண்டாம்
மக்களைப் பாருங்கள்
பொருளைச் சேர்த்திட
அரசியல் இல்லை
சேவைகள் செய்யுங்கள்
நாட்டை ஆளும்
அரசியல் தலைவர்கள்
ஆட்சி கையில்
அரசியல் தலைவர்கள்
கவனம் கொள்ளுங்கள்
ஆட்சி சிறப்பாய்
இல்லை என்றால்
தூக்கி எறிவீர்கள்
வந்தது என்று
ஆட்டம் போடுகிறீர்
மக்களை மறந்து
உங்களின் குடும்பம்
தழைக்கச் செய்கின்றீர்
வந்திடும் திட்டம்
மக்களை மறந்து
கமிஷன் தேடுகிறீர்
மக்களின் வறுமை
போக்கிடும் திட்டம்
செயல்பட மறுக்கின்றீர்
நாட்டை ஆளும்
அரசியல் தலைவர்கள்
கல்வி கற்றோர்
அரசியல் தலைவர்கள்
கவனம் கொள்ளுங்கள்
ஆட்சி சிறப்பாய்
இல்லை என்றால்
தூக்கி எறிவீர்கள்
வாழ்வு சிறக்க
திட்டம் தீட்டுங்கள்
உழவுத் தொழிலைச்
செய்வோர் கண்டு
ஊக்கம் காட்டுங்கள்
இலவசம் வேண்டாம்
வறுமைகள் நீங்க
வழிவகை செய்யுங்கள்
பாலியல் போதை
இல்லாத நாடாய்
மாற்றிட பாருங்கள்
நாட்டை ஆளும்
அரசியல் தலைவர்கள்
அரசியல் தலைவர்கள்
கவனம் கொள்ளுங்கள்
ஆட்சி சிறப்பாய்
இல்லை என்றால்
தூக்கி எறிவீர்கள்